Skip to main content

கம்பம் எம்.எல்.ஏ., ஜெகநாத் மிஸ்ரா உடன் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் கலந்துரையாடல்

தேனி, செப்.19-

தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு (TAFVA) சார்பில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்த மாநில நிர்வாகிகளுடன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர்  பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா கலந்துரையாடினார்.

அப்போது தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள், அரசின் நலத்திட்டங்களை பெறுவதில் உள்ள சவால்கள் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து எம்.எல்.ஏ., கேட்டறிந்தார்.
கூட்டமைப்பு சார்பில், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் நலன், வளர்ச்சி மற்றும் உரிமைப் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கை மனுக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் வழங்கப்பட்டன. மனுக்களில் இடம்பெற்ற கோரிக்கைகள் மீது உரிய கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளுடன் பேசி தீர்வு காண தேவையான முயற்சிகளை மேற்கொள்வேன் என்று எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தொண்டு நிறுவன பிரதிநிதிகளின் சேவையை பாராட்டி, சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி, பதக்கங்களை அணிவித்து கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டமைப்பு சட்ட ஆலோசகர், மக்கள் வழக்கறிஞர் எம்.கே.எம். முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராகக கலந்து கொண்டார்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கூட்டமைப்பின் மாநில தலைவர் Ln. Adv. பி.மனோகரன், மாநில பொதுச் செயலாளர் Ln. டாக்டர் வி.ஆர்.ராஜன் மற்றும் மாநில செயலாளர் Ln. ஆர். அருள் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
...........................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments