தேனி, செப்.25-
தேனியில் ஆக்சன் டெசா சார்பில் தச்சு தொழிலாளர்கள் தினம் ஏபிஎம் ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆக்சன் டெசா நிறுவனத்தின் கிளை மேலாளர் ஜெயன், தமிழ்நாடு மேலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர். தேனி மாவட்ட விற்பனையாளர் தேனி பிளைவுட் உரிமையாளர்கள் ராஜசேகர், விஜய்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனைத்தொடர்ந்து ஆக்சன் டெசாவின் மேலாண்மை இயக்குனர் விஜய் அகர்வால் காணொலி காட்சி மூலம் சிறப்பாக கலைநயத்துடன் வடிவமைக்கும் தச்சு தொழிலாளர்களை பாராட்டி உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஆக்சன் டெசா நிறுவன அலுவலர்கள் கோவை கோகுல்நாத், திருச்சி ரியாஸ்தீன், தேனி தமிழரசன், சேலம் பூபதி, திருநெல்வேலி முகமதுயாசின், புளோரிங் டிவிசன் பிரதீப் உள்பட சுமார் 200-க்கும் மேற்ப்பட்ட தச்சு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆக்சன் டெசா நவீன சிறந்த தயாரிப்பான எம்.டி.எப், மற்றும் எச்.டி.எச்.ஆர் பாய்லோ போர்டுகள் காட்சிபடுத்தபட்டிருந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தச்சு தொழிலாளர்களுக்கு கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
......................................
K.நாகராஜ், தலைமை நிருபர்


Comments