பூதிப்புரம் பேரூராட்சியில், தன்னிச்சையான அதிகார துஷ்பிரயோகத்தால் மக்கள் வரிப்பணத்தில் விளையாடும் கிளார்க்: மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
தேனி, செப்.19-
தேனி மாவட்டம், பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, தெரு மின்விளக்கு, போன்ற அடிப்படை பணிகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக பேரூராட்சி பகுதியில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் தொழில் வரி போன்ற வரிகள் மூலம் வருவாயை வசூல் செய்து பேரூராட்சி பகுதியில் அடிப்படை பணிகள் மற்றும் நிர்வாக பணிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த பேரூராட்சியில் உள்ள கிளார்க், மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் செயல் அலுவலர் பேச்சை கேட்பது இல்லை. பேரூராட்சி மன்ற நிர்வாகத்தின் பேச்சையும் கேட்பது போல் தெரிவதில்லை. நானே ராஜா.. நானே மந்திரி... என்று கூறிக்கொண்டு தன்னிச்சையாக எந்த ஒரு முடிவும் எடுத்து மக்கள் வரிப்பணத்தில் விளையாடி வீணடித்து வருகிறார். இதில் இந்த கிளார்க் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கவில்லை என்றால் பேரூராட்சி நிர்வாகத்திற்கு செலவு எதில் குறைவோ அதை தானே அவர் முடிவு செய்து மக்கள் பணத்தை சேமிக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யமாட்டார்.
அதுபோல மக்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற அதில் தனக்கு ஏதாவது ஆதாயம் இருந்தால், அதை கிளார்க்கே முன் நின்று செய்து முடித்து விடுவார். ஆனால் அவருக்கு ஆதாயம் இல்லை என்றால் அவருக்கு மேல் உள்ள செயல் அலுவலரோ, பேரூராட்சி மன்றமோ அல்லது உயர் அதிகாரிகளோ யார் கூறினாலும் தான் சொல்வதுதான் சட்டம், உத்தரவு, முடிவு என அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்.
இதனால் அலுவலக ரீதியான பணிகளுக்கு வருபவர்களும், பொதுமக்களும் கிளார்க்கின் தன்னிச்சையான முடிவால் அலைக்கழிப்பு செய்யப்பட்டு தங்களது பணிகள் முடிவடையாமல் மனவருத்ததுடன் திரும்பி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இவர் இப்படி நடந்து கொள்ள முக்கிய காரணம் என்னவென்றால் இவருடைய காட்பாதர் (பாஸ்) ரமேஷ் என்பவர் தேனி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாராம். இவருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அவர் பார்த்து கொள்வாராம்.
அதனால் தான் இவர் உயர் அதிகாரிகளின் உத்தரவையும், பேச்சையும் கேட்காமல் பேரூராட்சி அலுவலகத்திற்கு வரும் அனைவரிடமும் எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலக (பாஸ்) ரமேஷ் கூறிவிட்டார். அதனால் எதுவும் முடியாது என்று தனது பதிலை தன்னிச்சையான முடிவாக கூறி தவறான முறையில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்.
எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி கிளார்க் மீதும், அவருக்கு துணை போகும் தேனி மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலக அலுவலர்கள் மீதும் தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கிளார்க் அலைக்கழிப்பால் பாதிக்கப்பட்டவர்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
.............................. ..
K.நாகராஜ், தலைமை நிருபர்
செல் : 98421 45271




Comments