தேனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி: முதல் விற்பனையை மாவட்ட கலெக்டர் இரா.வைத்திநாதன் துவக்கி வைத்தார்.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்தியாவின் மிகப்பெரிய தலைமை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமாக திகழ்ந்து வருகிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளை 90 ஆண்டுகளுக்கு மேலாக கோ-ஆப்டெக்ஸ்" என்ற வணிக முத்திரையுடன் தற்போது 146 விற்பனை நிலையங்கள் மூலம் வணிகப்படுத்தும் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது.
பட்டு மற்றும் பருத்தி இரகங்களின் பாரம்பரிய மற்றும் நவீன சமகால வடிவமைப்புகளை கொண்டு சிறந்த கைத்தறி இரகங்களை வணிகப்படுத்தும் நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் விளங்கி வருகிறது.
தீபாவளி பண்டிகை காலத்திற்கான புதிய வடிவமைப்புகளில் பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், பருத்தி வேட்டிகள், படுக்கை விரிப்புகள் மற்றும் ஏராளமான இரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
மேலும், இளைய தலைமுறை வடிவமைப்புகளில் அவர்களது தேவைகளை வாடிக்கையாளர்களுக்கேற்ற நிறைவேற்றும் வண்ணம் பாரம்பரிய பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் புதுமையான வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களுடன் பல மதிப்பு கூட்டப்பட்ட இரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கைத்தறி இரகங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு இந்த ஆண்டும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டும், தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பட்டு மற்றும் பருத்தி கைத்தறி இரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள 2 (தேனி மற்றும் பெரியகுளம்) கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கும் சேர்த்து ரூ.75.50 லட்சங்கள் தீபாவளி விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட விற்பனை நிலையங்களின் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.61.02 லட்சங்கள் ஆகும்.
கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை
www.cooptex.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்பெறலாம். மேலும், கோ-ஆப்டெக்ஸின் மாதாந்திர சேமிப்புப் திட்டத்திலும் சேர்ந்து பயன்பெறலாம்.
இந்நிகழ்வில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சந்திரசேகரன், துணை மண்டல மேலாளர் அழகுச்செல்வி, விற்பனை நிலைய மேலாளர் அபிராமி, வாடிக்கையாளர்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
.............................
K.நாகராஜ், தலைமை நிருபர்

%20(26).jpeg)

Comments