தேனி, செப்.15-
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் சார்பில் 11-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேனி நகர் மற்றும் தேனியை சுற்றி உள்ள பகுதிகளில் 3 அடி முதல் 10 அடி வரையிலான 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
இதில் தலைமை விநாயகர் சிலை தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகே வைத்து பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் 15.9.2025 அன்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட தலைவர் இராமராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், தேனி நகர தலைவர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தில் ஆன்மிக அருளாசியாக, பூஜ்ய ஸ்ரீ ஓங்காரானந்த மகா சுவாமிகளின் சீடர் சுவாமி சிவமயானந்த சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சுவாமி சுடலையானந்தா சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் PLA ஜெகநாத் மிஸ்ரா, பாலசங்கா S.T. கதிரேசன், ரத்தினம் பஸ் உரிமையாளர் ஆன்மிக செல்வர் R. சுந்தரவடிவேல் , பாரதீய பார்வர்டு பிளாக் மாநில அமைப்பு செயலாளர் M.P.S. முருகன், அகில இந்திய பார்வர்டு பிளாக் தேனி மாவட்டப் பொதுச்செயலாளர் S.R.சக்கரவர்த்தி உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த ஊர்வலம் நிகழ்வில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் N. சக்திவேல், மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள், இந்து எழுச்சி முன்னணி மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின் போது விநாயகர் சிலைகள் மேளதாளம் முழங்க, தாரை தப்பட்டை, தேவராட்டம், கேரள கலைகளுடன், பெண்கள் முளைப்பாரி ஆகியவற்றுடன் 100-க்கும் மேற்பட்ட சிலைகள் வாகனங்களில் கோலாகலமாக அணிவகுத்து சென்றன. இந்த ஊர்வலத்தை தேனி நகரில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
ஊர்வலம் தேனி அருகே உள்ள பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவிலில் இருந்து தொடங்கி நகர் பகுதி வழியாக தேனி நேரு சிலையை கடந்து அரண்மனைப்புதூர் பகுதியில் செல்லக்கூடிய முல்லை ஆற்றில் விநாயகர் சிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக கரைக்கப்பட்டது.
ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
.........................
நாகராஜ், தலைமை நிருபர்
















Comments