தேனி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மரு.இரா.வைத்திநாதன் வழங்கினார்
தேனி, செப்.28- தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் 28.9.2026 அன்று மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரத்தை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் வழங்கினார். அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவித்தல். தாய் மற்றும் சேய் நலம் பேணுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் கடந்த ஜூன் 22 2026 முதல் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து. இன்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கும் விதமாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை...