Skip to main content

Posts

தேனியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, செப்.12- தேனி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேனி பழைய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் 12.9.2026 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளர் தங்க.தமிழ்செல்வன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், முன்னாள் எம்எல்ஏ., போடி லட்சுமணன், தேனி வடக்கு மாவட்ட துணை செயலாளர் திருகண்ணன், நகர செயலாளர்கள் சூர்யா பாலமுருகன், போடி புருஷோத்தமன், ஒன்றிய செயலாளர்கள் சக்கரவர்த்தி, அய்யப்பன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வட்ட கழக, மகளிர் அணி, சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கையின் பதில் உரையின் போது, முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் ஆணவ பேச்சை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். ......................... நாகராஜ், தலைமை நிருபர்  

தேனி உழவர் சந்தையில் நகராட்சி சார்பில் விவசாயிகள், பொதுமக்களுக்கு இலவசமாக உரம் வழங்கும் மையம் தொடக்கம்

  தேனி, செப்.11- தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் 4 வகைகளாக தரம் பிரிக்கப்பட்டு  ஈர கழிவுகள் பொம்மையகவுண்டன்பட்டி வாட்டர் டேங்க், பழைய கம்போஸ்ட், தேனி மேற்கு சந்தை, தேனி புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுற  கூடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு ஈர கழிவுகள் இயந்திரங்கள் மூலம் 10 mm-ல் இருந்து 30 mm வரை சிறு துகள்களாக வெட்டப்பட்டு அவை அங்கு அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் கொட்டப்பட்டு திறன் மிகு நுண்ணுயிர் திரவம் தெளிக்கப்பட்டு  45 நாட்கள் தொட்டியில் கிளறி பராமரித்து 46-வது நாள் உரமாக மாற்றப்படுகிறது. அவ்வாறு மாற்றப்படும் உரம் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தேனி உழவர் சந்தையில் காய்கறி கழிவுகளை பிரித்து வழங்குவதை அதிகப்படுத்தும் நோக்கிலும், உரத்தினை அனைவரும் பயன்படுத்த ஏதுவாக நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் தேனி உழவர் சந்தையில் இலவச உரம் வழங்கும்  மையம் செயல்பட தொடங்கியது .  இந்த உரம் வழங்கும் தொடக்க நிகழ்வில் நகராட்சி நகர் நல அலுவலர் கவிபிரி...

தேனியில் முதலமைச்சர் கோப்பை 2026-க்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் துவக்கி வைத்தார்

தேனி, செப்.10- தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை 2026-க்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் முன்னிலையில் 9.9.2026 அன்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என அனைவரும் பங்கேற்கும் வகையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு வெவ்வேறு புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு 5 பிரிவுகளில் மாவட்ட அளவில் 17 விளையாட்டு போட்டிகள், மண்டல அளவில் 7 விளையாட்டு போட்டிகள் மற்றும் மாநில அளவில் 37 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 52,000 பேர்கள் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 9.285 பேர்கள் கூடுதலாக பதிவு செய்துள்ளார்கள். முதல...

தேனியில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் தேசிய கண்தான விழிப்புணர்வு ஊர்வலம்

தேனி, செப்.9- தேனியில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் தேசிய கண்தான விழிப்புணர்வு ஊர்வலம் 7.9.2026 அன்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாஹிர் ஹுசைன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.  ஊர்வலத்தில் டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனையின் டாக்டர் பிரகதி, மண்டல பொது மேலாளர் ஸ்ரீனிவாசன்,  கிளை மேலாளர் சுசீலா சக்திவேல், மூத்த வணிக மேம்பாட்டு நிர்வாகி  கே. முகமது மொஹிதீன் மற்றும் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு மேலாளர் சேக்பரீத் , மக்கள் தொடர்பு அலுவலர் சசிக்குமார், தேனி நட்டாத்தி நாடார் கல்வி குழுமத்தின் முதல்வர் லாலி மோல், நர்சிங் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் எபி மற்றும்  டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் நட்டாத்தி நாடார் மருத்துவமனையின் நர்சிங் கல்லூரி மாணவிகள் சுமார் 100 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்தான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு கண்தானத்தின் அவசியம் குறித்து கோஷமிட்டு சென்றனர். இந்த ஊர்வலம் தேனியில் உள்ள டாக்டர் அகர்வால் கண்...

தேனி அல்லிநகரம் நகராட்சியில், அலுவலக சீட்டில் சரிவர இல்லாத ஆணையாளரால் நிர்வாக பணிகள் முடக்கம்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தேனி, செப்.7- தேனி மாவட்டத்தில் சிறப்பு நிலை அந்தஸ்தில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாக்கடை வசதி, தெரு மின்விளக்கு, சுகாதாரம், சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இதற்காக நகராட்சி பகுதியில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களிடம் இருந்து சொத்து வரி , குடிநீர் குழாய் வரி, தொழில் வரி, காலி இட வரி மற்றும் நகராட்சிக்கு சொந்தமான குத்தகை மூலம் வரி வசூல் என ஆண்டுக்கு சுமார் ரூ.20 கோடி வரை நகராட்சி நிர்வாகம் வசூல் செய்து வருகிறது. இந்த வரிகள் மூலம் வரும் பணத்தை நகராட்சி பொது நிதியில் இருப்பு வைக்கப்பட்டு நகராட்சி பகுதி மக்களின் முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும். இப்படி நகராட்சிக்கு வருவாயை தாராளமாக வாரி அள்ளி கொடுக்கும் மக்கள் தங்களது வீட்டு வரி விதிப்பு புதிய குடிநீர் குழாய் இணைப்பு, கட்டிட அனுமதி, சுகாதார பிரச்சினை மற்றும் நகராட்சி அலுவலக கோரிக்கை,  பொது பிரச்சினைகள் போன்ற கோரிக்கை தொடர்பாக நகராட்சி அலுவலகத...

கம்பம் அன்பு அறம் செய் அறக்கட்டளை சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா

தேனி, செப்.6- தேனி மாவட்டம், கம்பம் அன்பு அறம் செய் அறக்கட்டளை சார்பில்  ஆசிரியர் தினத்தன்று தேனி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து ஆசிரியர் தின ஆசிரியர் விருது- 2026 வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி கம்பம் அருகே உள்ள சதீஷ்குமார் அவர்களின் ஆல் இந்தியா பாரஸ்ட் வெல்பேர் ஆர்கனசேஷன் மையத்தில் 5.9.2026 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த ஓய்வு பெற்ற காவல்துறை கணேசன், கால்நடை மருத்துவர் செல்வம், கம்பம் எம்.எல்.ஏ. நேர்முக உதவியாளர் சுரேஷ்குமார், வாரியர் ஜிம் திருச்சிற்றம்பலம், சித்த மருத்துவர் பாத்திமா, இணைந்த கைகள் காந்தி, சுரேஷ் பாண்டி, வழக்கறிஞர் பிரபாகரன், ஜெயா, கோகிலா, நாகரத்தினம், நவநீதி சஞ்ஜீவி,வேல் சரண் ஆகியோர் ஆசிரியர் தினத்தை பற்றி எடுத்துக்கூறி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினத்தையே நாம் ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ஆம் நாளில் கொண்டாடுகின்றோம் என்பதை எடுத்துக் கூறி ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினர். நிகழ்ச்சியின் போது ஆசிரியர்கள் பிரகலாதன், பாண்டி, முத்து கணேசன், ராமச...

பெரியகுளத்தில் ராம்ஜி டிரஸ்ட் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்

  தேனி, செப்.6- தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோவில் கிரிவல பாதையில் செயல்பட்டு வரும் ராம்ஜி டிரஸ்ட் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்ட மறுவாழ்வு மையத்தின் சார்பில்  உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 5.9.2026 அன்று பெரியகுளத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை மக்களின் வழக்கறிஞர் MKM.முத்துராமலிங்கம் கொடியசைத்து துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். ஊர்வலத்தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் மக்களோடு நடந்து சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.  இந்நிகழ்ச்சியில் தேனி வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் நாணயம் சிதம்பரம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி உயிரி மருத்துவ பொறியாளர் ராஜேஷ் கண்ணா உள்பட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராம்ஜி ட்ரஸ்ட் நிறுவனர் வெங்கிடபூபதி நன்றி கூறினார். ............................. நாகராஜ், தலைமை நிருபர் 

மேகமலை புலிகள் சரணாலயத்திற்காக; மாவட்ட அதிகாரிகள் மேற்கொள்ளும் வெளியேற்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்: பரம்பரை வனவாசிகள் உரிமை பாதுகாப்பு சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு

தேனி, செப்.1- தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதனிடம் பரம்பரை வனவாசிகள் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தங்கமலை, ஒருங்கிணைப்பாளர் மருதுபாண்டி ஆகியோர் தலைமையில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது  தேனி மாவட்டத்தில் மேகமலை புலிகள் சரணாலயத்திற்காக வருசநாடு, மேகமலை, முருக்கோடை உள்ளிட்ட 98 மலை கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இந்த வெளியேற்ற நடவடிக்கை தொடர்பாக அனைத்தும் சரியாக நடக்கவில்லை என்பதை அதிகாரிகளின் கவனத்திற்கு நாங்கள் ஏற்கனவே கடிதம் மூலம் கொண்டு வந்திருந்தோம் என்பதையும். மேலும் FRA-வின் கீழ் ஒரு நபர் பரிசீலிக்க தகுதியற்றவர் என்ற கேள்வி உள்பட FRA-வின் அனைத்து அம்சங்களையும் உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கும் வரை எவரும் வெளியேற்றப்பட கூடாது என்று WP(C) 109/2008-ல் 28.2.2019 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலையும் நாங்கள் சமர்ப்பித்திருந்தோம் என்பதையும் தங்கள் கருத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.  ஆனால், மாவட்ட அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே மீறுவதில் பிடிவாதமாக உள்ளனர். மேலும் அந்த...

தேனி அரசு ஐ.டி.ஐ அருகே செல்லக்கூடிய திட்டச்சாலையை திறக்க கோரி நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் மாவட்ட கலெக்டரிடம் மனு

தேனி, ஆக.31- தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது  கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன், தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதனிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, தேனி மாவட்டம், தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை சாலை மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள், பேருந்து நிலையத்தின் கிழக்கு பகுதியில் உள்ள திட்டச்சாலை வழியாக இயங்கி கொண்டிருந்தது. இந்நிலையில் தேனி அரசு ஐடிஐ அருகே பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் திட்டச்சாலை தற்போது மூடப்பட்டுள்ளது.  அந்த திட்டச்சாலை மதுரை ரோட்டில் மேம்பால பணிகள் நடைபெற்ற போது நகராட்சி நிர்வாகத்தால் அரசினர் தொழிற்கல்வி நிலையத்தின் சுற்றுச்சுவரை இடித்து பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி நிதி மூலம் திட்டச்சாலை துவக்கப்பட்டு இயங்கி வந்தது. 2026-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு  முன்பிருந்தே திட்டச்சாலை மூடப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மண் மேடு உயர்த்தி பாதை இல்லாமல் உள்ளது. மதுரை சாலை வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் அரசினர் தொழிற்கல்வி நிறுவனத்திற்கு செல்வோரும் போக்குவரத்து இடையூறால் ...

கம்பம் எம்.எல்.ஏ., PLA.ஜெகநாத் மிஸ்ராவுக்கு நன்றி தெரிவித்த மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள்

தேனி, ஆக.22- தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் PLA.ஜெகநாத் மிஸ்ராவுக்கு மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து நன்றிகளை தெரிவித்தனர். கம்பம் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் மகளிர் குழுவினரின் ஐம்பது (50 ) ஆண்டுகால கோரிக்கையும், தமிழக மக்களின் ஆன்மீகம் மற்றும் பண்பாட்டு உரிமை சார்ந்த  மங்கலதேவி கண்ணகி கோவிலில், தமிழக அரசின் உரிமை பற்றியும், மங்கலதேவி கண்ணகி கோவில் புனரமைப்பு மற்றும் தமிழக வனப்பாதை சம்பந்தமாக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை, தமிழக அரசு நிறைவேற்றி தர தமிழக சட்டமன்றத்தில் வலியுறுத்தி கம்பம் சட்டமன்ற உறுப்பினர் P.L.A.ஜெகநாத் மிஸ்ரா பேசினார். இதனைத்தொடர்ந்து மங்கலதேவி அறக்கட்டளையின் சார்பாக கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் மகளிர் குழுவினர் பலர் கலந்து கொண்டனர். ....................... நாகராஜ், தலைமை நிருபர்