தேனி, செப்.6-
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோவில் கிரிவல பாதையில் செயல்பட்டு வரும் ராம்ஜி டிரஸ்ட் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்ட மறுவாழ்வு மையத்தின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 5.9.2026 அன்று பெரியகுளத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலத்தை மக்களின் வழக்கறிஞர் MKM.முத்துராமலிங்கம் கொடியசைத்து துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
ஊர்வலத்தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் மக்களோடு நடந்து சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தேனி வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் நாணயம் சிதம்பரம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி உயிரி மருத்துவ பொறியாளர் ராஜேஷ் கண்ணா உள்பட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராம்ஜி ட்ரஸ்ட் நிறுவனர் வெங்கிடபூபதி நன்றி கூறினார்.
.............................
நாகராஜ், தலைமை நிருபர்




Comments