Skip to main content

தேனியில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் தேசிய கண்தான விழிப்புணர்வு ஊர்வலம்

தேனி, செப்.9-

தேனியில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் தேசிய கண்தான விழிப்புணர்வு ஊர்வலம் 7.9.2026 அன்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாஹிர் ஹுசைன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். 

ஊர்வலத்தில் டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனையின் டாக்டர் பிரகதி, மண்டல பொது மேலாளர் ஸ்ரீனிவாசன்,  கிளை மேலாளர் சுசீலா சக்திவேல், மூத்த வணிக மேம்பாட்டு நிர்வாகி  கே. முகமது மொஹிதீன் மற்றும் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு மேலாளர் சேக்பரீத் , மக்கள் தொடர்பு அலுவலர் சசிக்குமார், தேனி நட்டாத்தி நாடார் கல்வி குழுமத்தின் முதல்வர் லாலி மோல், நர்சிங் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் எபி மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் நட்டாத்தி நாடார் மருத்துவமனையின் நர்சிங் கல்லூரி மாணவிகள் சுமார் 100 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்தான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு கண்தானத்தின் அவசியம் குறித்து கோஷமிட்டு சென்றனர்.

இந்த ஊர்வலம் தேனியில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கி தேனி நகரில் உள்ள நேரு சிலை , தேனி பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக சென்று, மீண்டும் கண் மருத்துவமனை தேனி கிளை வளாகத்தில் வந்தடைந்தது. 

இதனைத்தொடர்ந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கண்தானம் செய்வோம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

................................

நாகராஜ், தலைமை நிருபர் 


Comments