Skip to main content

தேனியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, செப்.12-

தேனி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேனி பழைய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் 12.9.2026 அன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளர் தங்க.தமிழ்செல்வன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், முன்னாள் எம்எல்ஏ., போடி லட்சுமணன், தேனி வடக்கு மாவட்ட துணை செயலாளர் திருகண்ணன், நகர செயலாளர்கள் சூர்யா பாலமுருகன், போடி புருஷோத்தமன், ஒன்றிய செயலாளர்கள் சக்கரவர்த்தி, அய்யப்பன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வட்ட கழக, மகளிர் அணி, சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கையின் பதில் உரையின் போது, முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் ஆணவ பேச்சை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
.........................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments