Skip to main content

கம்பம் அன்பு அறம் செய் அறக்கட்டளை சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா

தேனி, செப்.6-

தேனி மாவட்டம், கம்பம் அன்பு அறம் செய் அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தினத்தன்று தேனி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து ஆசிரியர் தின ஆசிரியர் விருது- 2026 வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி கம்பம் அருகே உள்ள சதீஷ்குமார் அவர்களின் ஆல் இந்தியா பாரஸ்ட் வெல்பேர் ஆர்கனசேஷன் மையத்தில் 5.9.2026 அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த ஓய்வு பெற்ற காவல்துறை கணேசன், கால்நடை மருத்துவர் செல்வம், கம்பம் எம்.எல்.ஏ. நேர்முக உதவியாளர் சுரேஷ்குமார், வாரியர் ஜிம் திருச்சிற்றம்பலம், சித்த மருத்துவர் பாத்திமா, இணைந்த கைகள் காந்தி, சுரேஷ் பாண்டி, வழக்கறிஞர் பிரபாகரன், ஜெயா, கோகிலா, நாகரத்தினம், நவநீதி சஞ்ஜீவி,வேல் சரண் ஆகியோர் ஆசிரியர் தினத்தை பற்றி எடுத்துக்கூறி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினத்தையே நாம் ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ஆம் நாளில் கொண்டாடுகின்றோம் என்பதை எடுத்துக் கூறி ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியின் போது ஆசிரியர்கள் பிரகலாதன், பாண்டி, முத்து கணேசன், ராமச்சந்திரன், மேரி சுபா, பாரதி, சஞ்சீவி ராணி, லாவண்யா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் அன்பு அறம் செய் அறக்கட்டளை நிறுவனர், சமூக ஆர்வலர் சுருளிப்பட்டி ரா.அன்பு ராஜா பொன்னாடை போர்த்தி, புத்தகங்களை வழங்கினார். 

இதனைத்தொடர்ந்து நிகழ்வில் சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 155-ம் ஆண்டு பிறந்த தினத்தை எடுத்துக் கூறியும், அன்னை தெரசா அவர்களின் நினைவு தினத்தை உலக ஐ.நா சபை தொண்டு தினமாக அறிவித்ததையும் அறக்கட்டளை நிறுவனர் அன்பு ராஜா எடுத்து கூறினார். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் செய்திருந்தார்.
.............................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments