தேனி, ஆக.3- தேனி தமிழக வெற்றிக் கழக தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி தலைமையில் த.வெ.க நிர்வாகியும், பிக் குவாலிஸ் சிஸ்டம் நிறுவன தலைவருமான ஹரிஹரன் மற்றும் ஆண்டிபட்டி தாலுகா, அரப்படிதேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தேனி கலெக்டர் வைத்திநாதனிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, குன்னூர் கிராமம் சர்வே எண்கள். 1221/2, 1222/1 உள்ள நிலமானது அரசு புறம்போக்குமாகும். இந்த நிலத்தில் வீடு இல்லாத எஸ்.சி (அருந்ததியர்) சமூக மக்களுக்கு வீடு வழங்க கோரி நீண்ட காலமாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்து நடவடிக்கையில் இருந்து வருகிறது. இந்நிலையில் 40 பயனாளர்களுக்கு பட்டா வழங்கிட குன்னூர் ஊராட்சி மன்றம் கடந்த 12.12.2024-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியது. அதன்பின்னர் அரசு தரப்பில் ஆண்டிபட்டி வட்டாட்சியர், கிராம நிர்வாக அதிகாரி, நில அளவையர் ஆகியோர் மேற்படி நிலத்தை ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரைத்தனர். ஆண்டிபட்டி வட்டாட்சியரது ஓ.மு.எண்.4535/2025-ஆ2-ன்படி நடவடிக்கை எடுத்து வருவதாக கடிதம் கிடைத்தது. வீட்டுமன...
News, Agri, Devotional, Political, Education, Sports, Development, Gerivence, Crime, Environmental, Technology, Information, Awareness, Festival,