Skip to main content

போடியில், டாக்டர் அப்துல் கலாம் 11-ம் ஆண்டு நினைவு நாளில் மாணவர்களுக்கு அன்னதானம்

தேனி, ஜூலை.27-

தேனி மாவட்டம், தமிழ் அறம் அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளை நிறுவனர் & தலைவர் மு.ஈஸ்வரன் தலைமையில் பல்வேறு சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் அறக்கட்டளை சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 11-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, போடிநாயக்கனூர், தர்மத்துப்பட்டியில் செயல்பட்டு வரும் நிர்மலா நடுநிலைப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக  CPI. ML. மாவட்ட செயலாளர் ஜோதிபாண்டிகண்ணன் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது பள்ளி நிர்வாகத்தினர் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் மு.ஈஸ்வரனுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
...........................................
நாகராஜ் காமுத்துரை, தலைமை நிருபர் 

Comments