தேனி சிவாஜி நகர் விரிவாக்க பகுதிக்கு பாதை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்: கலெக்டரிம் பொதுமக்கள் கோரிக்கை மனு
தேனி அல்லிநகரம் நகராட்சி 21-வது வார்டு பகுதியில் உள்ள சிவாஜி நகர் விரிவாக்க மக்கள் நலச்சங்கத்தினர் தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதனிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். இப்பகுதியில் ரேசன் கடையை தவிர எந்தவித அடிப்படை வசதிகளும் குடிநீர், தெருவிளக்கு, பாதை மற்றும் சாக்கடை வசதிகள் ஏதுமில்லாமல் வசித்து வருகின்றோம்.
எங்கள் பகுதியில் தற்போது வரை குப்பை வண்டி ஏதும் வந்ததே கிடையாது. இதனால் மக்கள் குப்பைகளை ஆங்காங்கே வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் கொட்டி வந்ததால், வனத்துறையினர் நாங்கள் சென்று வந்த வைகுண்டசாமி மில் அருகில் உள்ள வனப்பகுதி பாதையினை ஜேசிபி மூலம் குழி தோண்டி தற்போது அடைத்துள்ளனர். இதனால் எங்கள் பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நகருக்குள் வருவதற்கு மிகுந்த சிரமமடைகின்றனர். எங்கள் பகுதிக்கு விஸ்வநாததாஸ் காலனி வழியாக வரக்கூடிய பாதையானது மிகவும் குறுகலாக உள்ளதால், பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் அவசரகால ஆம்புலன்ஸ் வரவேண்டும் என்றால் கூட வனத்துறை அலுவலகத்திலிருந்து வரும் வனப்பகுதி வழியாக தான் வரவேண்டும். ஆனால் இதனையும் அடைத்துள்ளதால் கடந்த இரண்டு வார காலமாக மருத்துவ அவசரகாலங்களில் மிகுந்த சிரமமம் அடைந்துள்ளோம்.
..................................
நாகராஜ், தலைமை நிருபர்



Comments