Skip to main content

Posts

கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் உண்ணாவிரத காத்திருப்பு போராட்டம்: தேனி பங்களாமேடு பகுதியில் நாளை (ஜூன் 22) நடக்கிறது

தேனி, ஜூன்.21- தமிழ்நாடு முதல்வர் அவர்கள் விசாயிகளுக்கு அளித்த உத்தரவாதமான கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்கிற கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஜீன் 22 முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காலவரையற்ற உண்ணாவிரத மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் 22.6.226 திங்கட்கிழமை முதல் நடைபெறுகிறது. தேனி மாவட்டத்தில் இந்த போராட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் தலைமையில் தேனி பங்களாமேடு பகுதியில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவிக்கையில், கடந்த 15 ஆண்டுகளாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து உணவுப் பொருட்களும் விளையும் எவ்வித விலையேற்றமும் இல்லாமல் இருந்து வரும் சூழ்நிலையில், உரங்கள், மருந்துகள், ஆள்கூலி, இயந்திரங்களின் வாடகை, கடனுக்கான வட்டி என அனைத்துமே உயர்ந்து விட்ட சூழ்நிலையில், மத்திய மாநில அரசுகள் வாக்குறுதி அளித்தபடி விவசாயிகள் அனைத்து உணவுப் பொருட்களுக்கும் உற்பத்தி செலவுடன் 50% சேர்த்து விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்யப்படும் என்கிற வாக்க...

தேனியில், இந்து மக்கள் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் மலை தீப தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூன்.21- இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை தீப தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 21.6.2026 இன்று நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் கட்சியின் சார்பில் தேனி பழைய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத் தலைவர் குரு அய்யப்பன், ஆன்மீக அணி மாநில செயலாளர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தொண்டரணி மண்டல தலைவர் கருப்பையா, தேனி மாவட்ட பொதுச்செயலாளர் மணியம்பட்டி கார்த்திக், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் வேலு, தொண்டரணி தேனி மாவட்ட துணைச்செயலாளர் கலைச்செல்வன், தேனி ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், ஆன்மீக அணி மாவட்ட தலைவர் செல்வந்திரன், தேனி கொள்கை பரப்பு செயலாளர் பாலன், மாவட்ட தலைவர் செல்வேந்திரன், கடமலை மயிலை வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, தெற்கு ஒன்றிய செயலாளர் மாயவிதாகரன் உள்பட தேவாரம் பகுதி பொறுப்பாளர்கள், இ...

த.வெ.க-வில் இணைந்த போடியை சேர்ந்த அரசியல் பிரமுகர் குறிஞ்சிமணி

தேனி, 21- தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின்  தலைமையை ஏற்று த.வெ.க தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆலோசனையின் பேரில் தேனி மாவட்ட அரசியல் பிரமுகர், சமூக ஆர்வலர் குறிஞ்சிமணி 20.6.2026 அன்று சென்னை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை கழக அலுவலகத்தில் கழக பொதுச்செயலாளர், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் 20.6.2026 அன்று முதல் தன்னை அடிப்படை உறுப்பினராக இனைத்து கொண்டார். அப்போது கழக தேர்தல் பிரிவு மேலாண்மை செயலாளர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அருள் பிரகாசம், பிரபல திரைப்பட இயக்குனர்  ஆர்.வி. உதயகுமார் உள்பட அமைச்சர்கள், த.வெ.க-வினர் பலர் உடனிருந்தனர். ............................. நாகராஜ், தலைமை நிருபர் 

தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நூலகத்திற்கு தனக்கு பரிசாக கிடைத்த புத்தகங்களை வழங்கிய அன்பு அறம் செய் அறக்கட்டளை நிர்வாகி

தேனி, ஜூன்.20- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் இயங்கும் நூலகத்தில் அரசு அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்களை எடுத்து படித்து தங்களின் அறிவை மேம்படுத்தி கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த நூலக அலுவலரிடம் தேனி மாவட்டம், கம்பம் பகுதியை சேர்ந்த அன்பு அறம் செய் அறக்கட்டளை நிறுவனர் சுருளிப்பட்டி ரா.அன்பு ராஜா தனக்கு பரிசாக கிடைத்த புத்தகங்களை அனைவரும் படிப்பதற்காக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் முன்னலையில் 19.6.2026 அன்று நூலகத்திற்கு வழங்கினார்.  நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கிய அன்பு அறம் செய் அறக்கட்டளை நிர்வாகி அன்பு ராஜா தொடர்ந்து பல்வேறு சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு சமூக சேவை செய்து வரும் தன்னார்வலர் என்பது குறிப்பிடத்தக்கது. ........................... நாகராஜ், தலைமை நிருபர் 

தேனியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் வழங்கினார்.

தேனி, ஜூன்.19- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன், தலைமையில் இன்று (19.6.2026) நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் ஜுன் மாதம் வரை ஆண்டு மழையளவான 30420 மி.மீ-க்கு தற்பொழுது வரை 256.39 மிமீ மழை பெறப்பட்டுள்ளது. இது ஜூன் மாதம் வரை ஆண்டு இயல்பான மழையளவில் 47.81 மி.மீ குறைவாகும். ஜுன் 2026 மாதத்திற்கான இயல்பு மழையளவான 2760 மி.மீக்கு தற்பொழுது வரை 54.95 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. இது ஜூன் மாத இயல்பான மழை அளவை காட்டிலும் 27.35 மி.மீ அதிகமாகும். தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு நெல் 587 ஹெக்டர் பரப்பிலும், சிறுதான்யம் 121 ஹெக்டர் பரப்பிலும், பயறு வகைகள் 373 ஹெக்டர் பரப்பிலும், தோட்டக்கலை பயிர்களான பழப்பயிர்கள் 7366 ஹெக்டர் பரப்பிலும், காய்கறி பயிர்கள் 146 ஹெக்டர் பரப்பிலும், மலைத்தோட்ட பயிர்கள் 11044 ஹெக்டர் பரப்பிலும், நறுமணப்பயிர்கள் 1738 ஹெக்டர் பரப்பிலும், மலர்ப்பயிர்கள் 525 ஹெக்டர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் விதை 100 மெ.டன்னும், சிறுதானியங்கள் 6 மெடன்னும், பயறு வகை விதைக...

தேனி மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் 3-வது நாளாக நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடமிருந்து 1182 கோரிக்கை மனுக்கள்

தேனி, ஜூன்.18- தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம், பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய 5 வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களுக்கான 1435-ஆம் வசதி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 16.06.2026 அன்று முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி, மூன்றாவது நாளாக இன்றையதினம் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட கபுதுப்பட்டி, உத்தமபுரம், கம்பம். மேலக்கூடலூர் (தெற்கு) மேலக்கூடலூர் (வடக்கு). கீழக்கூடலூர் (மேற்கு), கீழக்கூடலூர் (கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 210 மனுக்கள் பெறப்பட்டது. இதில் உத்தமபாளையம் வட்டத்தில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான இ-பட்டாக்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்வில் உதவி இயக்குநர் (நில அளவை) அப்பாஸ், மாவட்ட அலுவலக மேலாளர் (பொது) சுந்தர்லால், வட்டாட்சியர் (உத்தமபாளையம்) பாலசண்முகம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் இதேபோன்று பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவ...

தேனி மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா அலுவலகங்களில் 2-வது நாளாக நடைபெற்ற ஜமாபந்தியில் 948 கோரிக்கை மனுக்கள்

  தேனி, ஜூன்.17- தேனி மாவட்டத்தில் உள்ள  உத்தமபாளையம், பெரியகுளம், தேனி ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய 5 தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட  கிராமங்களுக்கான 1435-ஆம் பலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து தாலுகா அலுவலகங்களில் நேற்று முதல் (16.6.2026) நடைபெற்று வருகிறது. இதில் தேனி மாவட்டம். உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய் தீர்வாய அலுவலர் /மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் தலைமையில் 2-வது நாளாக இன்று (17.6.2026) நடைபெற்றது. இவற்றில் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட தேவாரம் தேவாரம் மலை. தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம். பொட்டிபுரம், சங்கராபுரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 156 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் உத்தமபாளையம் வட்டத்தில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான இ-பட்டாக்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்வில் உதவி இயக்குநர் (நில அளவை) அப்பாஸ், மாவட்ட அலுவலக மேலாளர் (பொது) சுந்தர்லால், வட்ட...

"கீர்த்தி சக்ரா" விருது பெற்ற ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம் அவர்களின் இல்லத்திற்கு தேனி மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் நேரில் சென்று பாராட்டினார்

  தேனி, ஜூன்.17- தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம் அவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி இந்திய அரசின் கீர்த்தி சக்ரா" விருது பெற்றதைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் இன்று (17.6.2026), இராணுவ வீரரின் இல்லத்திற்கு நேரில் சென்று, பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி பாராட்டினார். இந்திய இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவில் பணியாற்றி வரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம் அவர்கள் டிசம்பர் 19, 2024 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் முகம் மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் அடைந்த நிலையிலும், தனது கடமையிலிருந்து தவறாமல் தொடர்ந்து போராடி, பயங்கரவாதிகளை வீழ்த்தினார். அவரது அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீரவிருதான கீர்த்தி சக்ரா விருதினை இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் கடந்த 8.6.2026...

தேனி மாவட்டத்தில், தாலுகா அலுவலகங்களில் 16-ந் தேதி நடந்த ஜமாபந்தியில் 788 கோரிக்கை மனுக்கள்

தேனி, ஜூன்.16- தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், தேனி, ஆண்டிப்பட்டி, போடி, உத்தமபாளையம் ஆகிய 5 தாலுகா அலுவலகங்களில் 1435-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி 16.6.2026 அன்று தொடங்கியது. இந்த ஐமாபந்தியின் நோக்கமானது வருவாய் கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள். புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இதில் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது.  இவற்றில் உத்தமபாளையம் தாலுகா பகுதியில் உள்ள சின்னமனூர், பூலானந்தபுரம், கருங்காட்டான்குளம், முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 166 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 20 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான இ.பட்டாக்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்வில் துணை இயக்குநர் (தோட்டக்கலை) நிர்மலா, உதவி இயக்குநர் (நில அளவை) அப்பாஸ். மாவட்ட ...

தேனி காட்ரோடு பகுதியில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உடல் நல்லடக்கம்: அமைச்சர்கள், திரை உலக பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்

தேனி, ஜூன்.11- தமிழ் திரைப்பட உலகில் என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன் என்ற கம்பீரக் குரலால் தனக்கென முத்திரை பதித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கினார்.  இதனைத்தொடர்ந்து அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, சிகப்பு ரோஜாக்கள் போன்ற பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பாரதிராஜா தனது 84-வது வயதில் உடல்நல குறைவால் 10.6.2026 அன்று காலமானார். இதன்பின்னர் பாரதிராஜாவின் உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.  இதனைத்தொடர்ந்து பாரதிராஜாவின் உடல் அவரது பிறந்த சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள காட்ரோடு பகுதியில் உள்ள அவரது தோப்பு வளாகத்தில் 11.6.2026 அன்று 72 குண்டுகள் முழங்க அரசு மரியாவுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக தமிழக அமைச்சர்கள் நிர்மல் குமார், வன்னியரசு, தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் மற்றும் போலீசார் தமிழக அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று அரசியல் பிரமுக...