தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நூலகத்திற்கு தனக்கு பரிசாக கிடைத்த புத்தகங்களை வழங்கிய அன்பு அறம் செய் அறக்கட்டளை நிர்வாகி
தேனி, ஜூன்.20-
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் இயங்கும் நூலகத்தில் அரசு அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்களை எடுத்து படித்து தங்களின் அறிவை மேம்படுத்தி கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நூலக அலுவலரிடம் தேனி மாவட்டம், கம்பம் பகுதியை சேர்ந்த அன்பு அறம் செய் அறக்கட்டளை நிறுவனர் சுருளிப்பட்டி ரா.அன்பு ராஜா தனக்கு பரிசாக கிடைத்த புத்தகங்களை அனைவரும் படிப்பதற்காக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் முன்னலையில் 19.6.2026 அன்று நூலகத்திற்கு வழங்கினார்.
நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கிய அன்பு அறம் செய் அறக்கட்டளை நிர்வாகி அன்பு ராஜா தொடர்ந்து பல்வேறு சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு சமூக சேவை செய்து வரும் தன்னார்வலர் என்பது குறிப்பிடத்தக்கது.
...........................
நாகராஜ், தலைமை நிருபர்


Comments