தேனியில், இந்து மக்கள் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் மலை தீப தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி, ஜூன்.21-
இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை தீப தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 21.6.2026 இன்று நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் கட்சியின் சார்பில் தேனி பழைய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத் தலைவர் குரு அய்யப்பன், ஆன்மீக அணி மாநில செயலாளர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
தொண்டரணி மண்டல தலைவர் கருப்பையா, தேனி மாவட்ட பொதுச்செயலாளர் மணியம்பட்டி கார்த்திக், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் வேலு, தொண்டரணி தேனி மாவட்ட துணைச்செயலாளர் கலைச்செல்வன், தேனி ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், ஆன்மீக அணி மாவட்ட தலைவர் செல்வந்திரன், தேனி கொள்கை பரப்பு செயலாளர் பாலன், மாவட்ட தலைவர் செல்வேந்திரன், கடமலை மயிலை வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, தெற்கு ஒன்றிய செயலாளர் மாயவிதாகரன் உள்பட தேவாரம் பகுதி பொறுப்பாளர்கள், இந்து மக்கள் கட்சி மற்றும் தொண்டரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது திருப்பரங்குன்றம் மலை தீப தூணில் நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக தீபம் ஏற்ற அரசு நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
................................
நாகராஜ், தலைமை நிருபர்





Comments