Skip to main content

தேனி மாவட்டத்தில், தாலுகா அலுவலகங்களில் 16-ந் தேதி நடந்த ஜமாபந்தியில் 788 கோரிக்கை மனுக்கள்

தேனி, ஜூன்.16-
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், தேனி, ஆண்டிப்பட்டி, போடி, உத்தமபாளையம் ஆகிய 5 தாலுகா அலுவலகங்களில் 1435-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி 16.6.2026 அன்று தொடங்கியது.

இந்த ஐமாபந்தியின் நோக்கமானது வருவாய் கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள். புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இதில் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது. இவற்றில் உத்தமபாளையம் தாலுகா பகுதியில் உள்ள சின்னமனூர், பூலானந்தபுரம், கருங்காட்டான்குளம், முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 166 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 20 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான இ.பட்டாக்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்வில் துணை இயக்குநர் (தோட்டக்கலை) நிர்மலா, உதவி இயக்குநர் (நில அளவை) அப்பாஸ். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார். அலுவலக மேலாளர் (பொது)சுந்தர்லால், வட்டாட்சியர் பாலசண்முகம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் தலைமையில் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட கெங்குவார்பட்டி பிட்-1, கெங்குவார்பட்டி பிட் -2, தேவதானப்பட்டி பிட். 1, தேவதானப்பட்டி பிட் 2., தே.வாடிப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 132 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
அதுபோல தேனி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட பாதுகாப்பு வழங்கல் மற்றும் நுகர்வோர் அலுவலர் நல்லையா தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் தேனி வட்டத்திற்குட்பட்ட ஊஞ்சாம்பட்டி, அல்லிநகரம், வீரபாண்டி, உப்பார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 224 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 
இந்நிகழ்வின் போது தேனி தாசில்தார் சதீஸ்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் மதுகண்ணன், ராமச்சந்திரன், ஜீவா, காந்தி, சிவசங்கரி, தேனி சர்வேயர் கணேஷ் உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதேபோன்று ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) கவிதா தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி, சண்முகசுந்தரபுரம், ஆண்டிபட்டி பிட்-1, ஆண்டிபட்டி பிட்-2 ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 81 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

போடி தாலுகா அலுவலகத்தில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகைதீன் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட இராசிங்காபுரம். சிலமலை, போ.அம்மாபட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 185 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
16.6.2026 அன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டாக்கள், பிறப்பு-இறப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து நிவாரணத்தொகை, நலிந்தோர் உதவித்தொகை. நிலம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 788 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 

வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பெறப்படும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கிட மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம், பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய 5 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 16.6.2026 முதல் 24.6.2026 வரை (20.6.2026, 21.6.2026, 22.6.2026 ஆகிய நாட்கள் நீங்கலாக) 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
..................................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments