தேனி மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் 3-வது நாளாக நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடமிருந்து 1182 கோரிக்கை மனுக்கள்
தேனி, ஜூன்.18-
தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம், பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய 5 வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களுக்கான 1435-ஆம் வசதி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 16.06.2026 அன்று முதல் நடைபெற்று வருகிறது.
அதன்படி, மூன்றாவது நாளாக இன்றையதினம் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட கபுதுப்பட்டி, உத்தமபுரம், கம்பம். மேலக்கூடலூர் (தெற்கு) மேலக்கூடலூர் (வடக்கு). கீழக்கூடலூர் (மேற்கு), கீழக்கூடலூர் (கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 210 மனுக்கள் பெறப்பட்டது.
இதில் உத்தமபாளையம் வட்டத்தில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான இ-பட்டாக்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்வில் உதவி இயக்குநர் (நில அளவை) அப்பாஸ், மாவட்ட அலுவலக மேலாளர் (பொது) சுந்தர்லால், வட்டாட்சியர் (உத்தமபாளையம்) பாலசண்முகம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
இதேபோன்று பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் தலைமையில் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட கீழவடகரை, வடகரை பிட்- 1, வடகரை பிட்- 2 தென்கரை பிட்- 1 தென்கரை பிட்-2 ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 276 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) கவிதா தலைமையில் ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட மொட்டனூத்து, ஜி.உசிலம்பட்டி தேக்கம்பட்டி, மரிக்குண்டு, குன்னூர், வள்ளல்நதி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 81 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
அதுபோல தேனி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நல்லையா தலைமையில் தேனி வட்டத்திற்குட்பட்ட பூமலைக்குண்டு. தப்புக்குண்டு, தாடிச்சேரி, கோவிந்தநகரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 135 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
போடி தாலுகா அலுவலகத்தில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகைதீன் இப்ராஹிம் தலைமையில் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட டொம்புச்சேரி, கூழையனூர், போடிநாயக்கனூர், மேலச்சொக்கநாதபுரம், போடி மேற்குமலை ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்றவருவாய்தீர்வாயத்தில் 480 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
18.6.2026 இன்றையதினம்3-வது நாளாக நடைபெற்ற நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு-இறப்புச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து நிவாரணத்தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 1182 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பெறப்படும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கிட மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
....................................
நாகராஜ், தலைமை நிருபர்





Comments