Skip to main content

Posts

போடி பரமசிவன் மலைக்கோவில் சித்திரை திருவிழாவிற்கு கொடிமரம் ஊன்றும் பூஜை: தமிழக முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பு

தேனி, ஏப்.9- தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்திருக்கும் தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் போடி பரமசிவன் மலைக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை 1-ந் தேதியில் இருந்து 7-ந் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவிற்கான கொடிமரம் ஊன்றும் நிகழ்ச்சி  9.4.2026 அன்று நடைபெற்றது. போடி நகர் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த பெரியாண்டவர்   கோவிலில் இருந்து  கொடிமரம்  சுமார் 5 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கொடி மர பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.  அதனைத்தொடர்ந்து கிரிவல பாதையில் கொடிமரம் மலைக் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த கிரிவல பாதையில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஜுப்பில் மலைக்கோவிலுக்கு சென்று பழமை வாய்ந்த சிவன் கோவிலில் வழிபாடு செய்தார்.  இந்நிகழ்ச்சியில் போடி ஜமீன்தார் வடமலை ராஜையபாண்டியன், தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்,பி., முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத், போடி நகர் த...

தேனி மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்று சிலிண்டர் மற்றும் உணவு பொருட்கள் விலையை உயர்த்தினால் புகார் தெரிவிக்கலாம்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல்

தேனி, ஏப்.7- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் காரணத்தினால் கச்சா எண்ணெய் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கடந்த மாதத்தில் பொதுமக்களிடையே தகவல் பரவியது.  இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வணிக உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதன் காரணமாக சாலையோர துரித உணவு கடைகள், இரவு நேர டிபன் உணவகங்கள் தேனி மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சில கடைகள் தற்காலிகமாக அடைக்கப்பட்டு விட்டன. இருப்பினும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை பொருட்படுத்தாமல் நடத்தி வரக்கூடிய டீ கடைகள் மற்றும் ஹோட்டல்களில் உணவு பொருட்களில் விலைகள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளன. அதுபோல அடிப்படையாக தயாரிக்கக்கூடிய சில உணவு பொருட்களை கூட தயாரிப்பதை  நிறுத்தி விட்டனர். தேனி பகுதியில் இந்த திடீர் விலை ஏற்றத்தால் டீ, காபி, இட்லி, வடை போன்ற உணவுப்பொருட்கள் ரூ.2 முதல் ரூ 5 வரை விலை உயர்ந்துள்ளது. ஆனால் சில டீ கடை மற்றும் ஓட்டல் நிறுவனங்கள் விலைகளை ஏற்றாமல் பொருட்களின் குவாலிட்டி மற்றும் குவாண்டிட்ட...

போடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல்

தேனி, ஏப்.6- தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் 6.4.2026 அன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதற்கான வேட்பு மனுவை போடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நல்லையனிடம் முன்னாள் முதல்வரும், திமுக வேட்பாளருமான ஓ.பி.எஸ்., தனது வேட்பு மனுவை வழங்கினார். அப்போது தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபிநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக திமுக வேட்பாளர் ஓபிஎஸ்., மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என மக்கள் வெள்ளத்தில் போடி கட்டபொம்மன் சிலையில் இருந்து ஊர்வலமாக போடி தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து ஓபிஎஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,  தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை வேட்பாளராக அறிவித்தார். வேட்பு மனு தாக்கல் செய்து...

போடி சட்டமன்ற தொகுதியில் திமுக தேர்தல் அலுவலக பணிமனை திறப்பு : வேட்பாளர் ஓ.பி.எஸ்., ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

தேனி, ஏப்.6- தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவர் போடி தொகுதியில் உள்ள சமுதாய தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்பட பல்வேறு சங்க நிர்வாகிகளை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரி வருகிறார்.  இந்நிலையில் திமுக தேர்தல் அலுவலக பணிமனைகள் போடி மற்றும் பழனிசெட்டிபட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணி மனைகள் திறப்பு விழா 6.4.2026 அன்று நடைபெற்றது. இதனை முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில் தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் போடி லட்சுமணன், ஆர்.டி. கணேசன் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  இதற்கிடையே போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போடி நகரில் உள்ள ஆரிய வைசிய சோழிய செட்டியார் சங்கம் நடுமண்டபம், ஜே.கே பட்டி 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கம், திருமலாபுரம் 24 மனை தெலுங்கு செட்டியார் காமாட்சி அம்மன் கோவில், திருமலாபுரம் நாடார் உறவினர் ச...

தேனி அருகே நடந்த யுகாதி விழாவில் பங்கேற்ற முன்னாள் முதல்வர், போடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பி.எஸ்., அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

தேனி, ஏப்.5- தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கம், தேனி மாவட்ட ரெட்டி நலச்சங்கம் சார்பில் யுகாதி விழா மற்றும் குடும்ப விழாவில் தேனி- பழனிசெட்டிபட்டி போடி விலக்கு அருகே அமைந்துள்ள கிருத்திக் கிராண்ட் ஹோட்டலில் 5.4.2026 அன்று நடைபெற்றது. விழாவிற்கு ரெட்டி நலச்சங்கம் மாநில தலைவர் ரவி ரெட்டி தலைமை தாங்கினார். தேனி மாவட்ட ரெட்டி நலச்சங்க தலைவர் டாக்டர் வி.ஆர்.ராஜன் முன்னிலை வகித்தார்.  விழாவிற்கு வந்த அனைவரையும் மாவட்ட செயலாளர் அருண் பாஸ்கர் வரவேற்றார். விழாவில் தமிழக முன்னாள் முதல்வர், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ரெட்டி நலச்சங்கத்தினர் சார்பில் முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ.பி.எஸ்., அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து திமுக வேட்பாளர் ஓ.பி.எஸ்., அவர்கள் போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வ...

போடி சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

தேனி, ஏப்.5- தேனி திமுக வடக்கு மாவட்டம்,  போடிநாயக்கனூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் போடி மனோ தேவ் மஹாலில்  5.4.2026 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர், தேனி பாராளுமன்ற உறுப்பினர்   தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கினார். போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத், போடி திமுக மேற்கு ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமணன், போடி நகர திமுக செயலாளர் புருஷோத்தமன்,  தேனி ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி உள்பட திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களை உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.  ............................. நாகராஜ், தலைமை நிருபர்  

பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டாக்டர்.கதிர்காமு வேட்புமனு தாக்கல்

தேனி, ஏப்.4- பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் அமமுக-வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் கதிர்காமு வேட்பாளராக போட்டியிடுகிறார்.  இந்நிலையில் அமமுக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு அதிமுக, பாஜக, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று 4.4.2026 அன்று பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரஜத்பீடன் அவர்களிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது தேனி அமமுக மாவட்ட செயலாளர்கள் காசிமாயன், முத்துச்சாமி, தேனி நகர அதிமுக செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் பெரியகுளம் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் அன்னபிரகாஷ், ராஜகுரு, பெரியகுளம் நகர அதிமுக செயலாளர் பழனியப்பன், தேனி நகர அமமுக செயலாளர் குரு கணேஷ், தேனி நகர பாஜக தலைவர் ரவிக்குமார் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  .......................... நாகராஜ், தலைமை நிருபர்  

போடி- மதுரை இடையே தினசரி காலை, மாலை புதிய ரயில் சேவை வலியுறுத்தி மே 12-ல் ஆர்ப்பாட்டம்: திண்டுக்கல் குமுளி அகல இரயில் பாதை திட்ட போராட்டக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

  தேனி, ஏப்.2- திண்டுக்கல் குமுளி அகல இரயில் பாதை திட்ட போராட்டக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் போடி சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் 1.4.2026 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் போராட்டக்குழு செயலாளர்கள் மெல்வின், அந்தோனி பிரான்சிஸ், ஜான்சன், மகாராஜன், துணைத்தலைவர்கள் ஆரோக்கியராஜ், துடிவீரன், முருகேசன், போடி நகர செயலாளர் அரிகரன், செந்தில்குமார், தங்கம், ஆண்டிப்பட்டி வட்டார தலைவர் இளங்கோ, செயலாளர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தேனி நகர்  செயலாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் பல்வேறு கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- போடியில் இருந்து தினசரி காலை 7 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கும், மதுரையில் இருந்து மாலை 7 மணிக்கு புறப்பட்டு போடிக்கும் புதிய ரயில் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் மே.12-ந் தேதி மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. போராட்டக்குழு சார்பில் டெல்லி சென்று ரயில்வே அமைச்சரிடம், திண்டுக்கல் சபரி...

தேனியில் வாக்காளர்கள் இடையே 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி: மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தொடங்கி வைத்தார்.

தேனி, ஏப்.2- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேனி-அல்லிநகரம் நகராட்சியில் வாக்காளர்களிடையே 100 சதவிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் 1.4.2026 அன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற 2026 பொதுத்தேர்தல் முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 198ஆண்டிபட்டி, 199.பெரியகுளம் (தனி), 200.போடிநாயக்கனூர் மற்றும் 201கம்பம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகின்ற 23.4.2026 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிப்பை உறுதி செய்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து இருசக்கர வாகனப் பேரணிகள், கையெழுத்து இயக்கம், சுவரொட்டி விளம்பரம் துண்டுப்பிரசுரம் வழங்குதல், ரங்கோலி நடைபயண பேரணி மனித சங்கிலி, தெரு நாடகம், விளம்பரப் பதாகைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வுப் பணிகள் அனைத்து சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக, முதன் முறை வாக்காளர்கள், மூத்த குடிமக்கள், ...

தேனியில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி பெரியகுளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தேனி, ஏப்.1- தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டாக்டர்.கதிர்காமு வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  தேனியில் உள்ள அம்பி வெங்கடசாமி திருமண மண்டபத்தில் 1.4.2026 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேனி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் தலைமை தாங்கினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர்கள் காசிமாயன், முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் தேனி மாவட்ட பாஜக தலைவர் இராஜபாண்டியன், தேனி நகர அதிமுக செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார், பெரியகுளம் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் அன்னபிரகாஷ், ராஜகுரு, பெரியகுளம் நகர அதிமுக செயலாளர் பழனியப்பன், தேனி நகர அதிமுக துணை செயலாளர் சுந்தரபாண்டியன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் செல்லமுத்து ஜெயக்குமார் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும்  அமமுக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு அவர்களை அறிமுகம் செய்து வைத்து...