Skip to main content

தேனி அருகே நடந்த யுகாதி விழாவில் பங்கேற்ற முன்னாள் முதல்வர், போடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பி.எஸ்., அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

தேனி, ஏப்.5-

தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கம், தேனி மாவட்ட ரெட்டி நலச்சங்கம் சார்பில் யுகாதி விழா மற்றும் குடும்ப விழாவில் தேனி- பழனிசெட்டிபட்டி போடி விலக்கு அருகே அமைந்துள்ள கிருத்திக் கிராண்ட் ஹோட்டலில் 5.4.2026 அன்று நடைபெற்றது.

விழாவிற்கு ரெட்டி நலச்சங்கம் மாநில தலைவர் ரவி ரெட்டி தலைமை தாங்கினார். தேனி மாவட்ட ரெட்டி நலச்சங்க தலைவர் டாக்டர் வி.ஆர்.ராஜன் முன்னிலை வகித்தார். விழாவிற்கு வந்த அனைவரையும் மாவட்ட செயலாளர் அருண் பாஸ்கர் வரவேற்றார்.

விழாவில் தமிழக முன்னாள் முதல்வர், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது ரெட்டி நலச்சங்கத்தினர் சார்பில் முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ.பி.எஸ்., அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து திமுக வேட்பாளர் ஓ.பி.எஸ்., அவர்கள் போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஆதரவு கோரினார்.

இந்த விழா நிகழ்வில் ரெட்டி சங்கத்தின் தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் தேனி மாவட்ட ரெட்டி நலச்சங்க பொருளாளர் செந்தில் நன்றி கூறினார்.
...............................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments