போடி- மதுரை இடையே தினசரி காலை, மாலை புதிய ரயில் சேவை வலியுறுத்தி மே 12-ல் ஆர்ப்பாட்டம்: திண்டுக்கல் குமுளி அகல இரயில் பாதை திட்ட போராட்டக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
தேனி, ஏப்.2-
திண்டுக்கல் குமுளி அகல இரயில் பாதை திட்ட போராட்டக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் போடி சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் 1.4.2026 அன்று நடைபெற்றது.
கூட்டத்தில் போராட்டக்குழு செயலாளர்கள் மெல்வின், அந்தோனி பிரான்சிஸ், ஜான்சன், மகாராஜன், துணைத்தலைவர்கள் ஆரோக்கியராஜ், துடிவீரன், முருகேசன், போடி நகர செயலாளர் அரிகரன், செந்தில்குமார், தங்கம், ஆண்டிப்பட்டி வட்டார தலைவர் இளங்கோ, செயலாளர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தேனி நகர் செயலாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் பல்வேறு கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
போடியில் இருந்து தினசரி காலை 7 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கும், மதுரையில் இருந்து மாலை 7 மணிக்கு புறப்பட்டு போடிக்கும் புதிய ரயில் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் மே.12-ந் தேதி மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
போராட்டக்குழு சார்பில் டெல்லி சென்று ரயில்வே அமைச்சரிடம், திண்டுக்கல் சபரிமலை ரயில்பாதை திட்டத்தை. திண்டுக்கல் லோயர்கேம்ப் மற்றும் லோயர்கேம்ப் சபரிமலை என இரண்டாக பிரித்து. திண்டுக்கல் லோயர்கேம்ப் திட்டத்தை உடனே செயல்படுத்த கோரிக்கை மனு அளித்தை ஏற்று மத்திய அமைச்சர் அது குறித்து ஆய்வு செய்ய ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனை விரைவுபடுத்தி, திட்ட மதிப்பீடு தயார் செய்து, உடனே மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
தேனி மற்றும் போடியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை விரைவுபடுத்தி உடனே நிறைவு செய்து சாலை போக்குவரத்துக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் முன் வரவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
............................
நாகராஜ், தலைமை நிருபர்


Comments