Skip to main content

தேனியில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி பெரியகுளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தேனி, ஏப்.1-

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டாக்டர்.கதிர்காமு வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனியில் உள்ள அம்பி வெங்கடசாமி திருமண மண்டபத்தில் 1.4.2026 அன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தேனி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் தலைமை தாங்கினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர்கள் காசிமாயன், முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் தேனி மாவட்ட பாஜக தலைவர் இராஜபாண்டியன், தேனி நகர அதிமுக செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார், பெரியகுளம் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் அன்னபிரகாஷ், ராஜகுரு, பெரியகுளம் நகர அதிமுக செயலாளர் பழனியப்பன், தேனி நகர அதிமுக துணை செயலாளர் சுந்தரபாண்டியன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் செல்லமுத்து ஜெயக்குமார் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும்  அமமுக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு அவர்களை அறிமுகம் செய்து வைத்து தேர்தல் பணிகள் குறித்தும், வேட்பாளர் டாக்டர் கதிர்காமு அவர்களுக்கு குக்கர் சின்னத்தில் அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்வது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. 
முடிவில் தேனி நகர அமமுக செயலாளர் குரு கணேஷ் நன்றி கூறினார்.
................................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments