தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் உதவி மேலாளர் A.P.P. ராஜா அழகணன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா
தேனி, ஜூன்.3- தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தில் 32 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி உதவி மேலாளராக பணி நிறைவு பெற்ற A.P.P. ராஜா அழகணன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா தேனியில் உள்ள வெஸ்டர்ன் கார்ட்ஸ் ஹோட்டலில் 2.6.2026 அன்று நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம், முன்னாள் எம்.பி., பார்த்திபன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை முன்னாள் தலைவர் ராஜமோகன், தொழிலதிபர் ராஜசேகரன், வக்கீல் செல்வகுமார் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு பணி ஓய்வு பெற்ற A.P.P. ராஜா அழகணனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தி பேசினர். விழாவில் தொழிலதிபர் சுந்தரவடிவேல், இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, இ.காங்கிரஸ் ஐ.என்.டி.யு.சி மாவட்ட தலைவர் ஜம்பு சுதாகர், வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் நாணயம் சிதம்பரம், கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளர் செல்வகுமார் உள்பட கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பல்வேறு கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர...