தேனி, ஜூலை.22-
தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பழைய பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் சன்னாசி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணவேணி சக்திவேல், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன், தேனி வட்டார தலைவர் முருகன், பெரியகுளம் வட்டார தலைவர் ஹம்சா முகமது, சின்னமனூர் வட்டார தலைவர் ஜீவா, தேனி நகர தலைவர் சம்சுதீன், போடி நகர தலைவர் முசாக் மந்திரி, INTUC மாவட்ட தலைவர் ஜம்பு சுதாகர் உள்பட மாவட்ட, நகர, வட்டார, பேரூர், ஊராட்சி மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியையும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி MP மற்றும் பிரியங்கா காந்தி MP ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
..............................
K.நாகராஜ், தலைமை நிருபர்




Comments