Skip to main content

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூலை.21-

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தின் போது தேனியில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஆண்டிபட்டி தாலுகா, கண்டமனூர் புதுக்குளம் கண்மாய் நீர் வழித்தடத்தில் தனியார் நிறுவனத்தினர் அமைத்துள்ள உயர் மின் கோபுரத்தை அகற்ற வேண்டும். தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சமர் ஜாரி நிலங்களை மீட்டு நிலமற்ற பட்டியல் சமூக மக்களுக்கு வழங்க வேண்டும். தேவதானபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் இயங்கி வரும் தனியார் மதுபான கூடம், வைகை அணையில்  இயங்கி வரும் தமிழ்நாடு மதுபானக்கூடம், தேனி புதிய பஸ் நிலையம் அருகில் செயல்பட்டு வரக்கூடிய மனமகிழ் மன்றம் மற்றும் மதுபானக்கூடங்களை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை  தேனி கலெக்டர் அலுவலகத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கொடுத்தனர்.

..............................

K.நாகராஜ், தலைமை நிருபர் 

Comments