தேனி, ஜூன்.2 -
தேசிய அளவில் பெண்களுக்கான தடகளப்போட்டி கடந்த மே.31, ஜூன்1 ஆகிய 2 நாட்கள் கோவாவில் நடைப்பெற்றது. இப்போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக தேனி மாவட்டத்தை சார்ந்த 105 தடகள வீராங்கனைகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
இதில் தமிழ்நாட்டின் சார்பில் வெற்றி பெற்ற 105 வீராங்கனைகளில் தங்க பதக்கம் - 26 பேரும், வெள்ளி பதக்கம் 28 பேரும், வெண்கல பதக்கம் 27 என மொத்தம் 81 பதக்கங்களை வென்று
2- ஆம் இடத்தை பிடித்தனர்.
இந்த தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களை தேனி மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் கீதா சசி அனைவருக்கும் டி.சர்ட் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டி கௌரவப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் செயலாளர் சிவா, துணைத்தலைவர்கள் ராமகிருஷ்ணன், சசிக்குமார், வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
............................
நாகராஜ், தலைமை நிருபர்
செல் : 9842145271
.




Comments