Skip to main content

தேனி தட்சிணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடு

தேனி,மே.27-

நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு 26.5.2026 அன்று வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பெயர்ச்சி ஆனார்.இந்த குரு பெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடு தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள வேதபுரி, ஸ்ரீ ஸ்வாமி சித்பவானந்த ஆசிரமத்தில் அமைந்திருக்கும்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி கோவிலில் நடைபெற்றது.
இந்த குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடுக்கு ஸ்ரீ சமனாந்த சுவாமிகள் தலைமை தாங்கினார். இதில் ஸ்ரீ குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் போது ஸ்ரீ மஹாகணபதி ஹோமம், ஸ்ரீ நவக்ரஹ ஹோமம், ஸ்ரீ தேவகுரு ஹோமம் செய்து ஸ்ரீ தேவகுரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்து புஷ்பாஞ்சலி, கூட்டு வழிபாடு, ஆதிகுருவுக்கும், தேவகுருவுக்கும் ஷோடச உபசார பூஜைகள் மகாதீபாரதனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆசிரமம் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ தட்சிணமூர்த்தி மற்றும் உற்சவர் குருபகவானை தரிசனம் செய்தனர். குருபூஜை சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.
.............................
நாகராஜ், தலைமை நிருபர் 
செல் : 9842145271


Comments