Skip to main content

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி: தேனியில் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தேனி,பிப்.8-

டெல்லி சட்டமன்றத்தில் உள்ள 70 இடங்களில் நடைபெற்ற தேர்தலில் 48 இடங்களை பிடித்து பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பா.ஜ.க முன்னிலையில் இருக்கும் போதே தேனி மாவட்ட மற்றும் நகர பா.ஜ.க சார்பில் தேனி நேரு சிலை அருகே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது தேனி மாவட்ட பா.ஜ.க தலைவர் ராஜபாண்டியன், தேனி நகர பா.ஜ.க தலைவர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் பா.ஜ.க-வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி டெல்லி சட்டமன்ற தேர்தல் வெற்றி பெற்றதற்கான மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வெற்றி கோஷங்கள் எழுப்பினார்கள். 
இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள் மலைச்சாமி, மணிகண்டன், விஜயகுமார், பாண்டியராஜன், செல்வேந்திரன், ஜெயமுருகன், மதிவாணன், முருகேசன், முத்துராஜா, கவிதா, மீனா உள்பட பா.ஜ.க பிரமுகர்கள், மகளிரணியினர், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 


...........................


Comments