தேனியில், பா.ஜ.க தேனி மாவட்ட தலைவர் பி.ராஜபாண்டியன் பொறுப்பு ஏற்கும் விழா: மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் பங்கேற்பு
தேனி, பிப்.10-
தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவராக பி.ராஜபாண்டியன் கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட தலைவராக பி.ராஜபாண்டியன் பொறுப்பேற்கும் விழா தேனி வசந்த மஹாலில் 10.2.2025 அன்று நடைபெற்றது.
விழாவிற்கு முன்னாள் மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியன் தலைமை தாங்கினார். நகர தலைவர் ரவிக்குமார் வரவேற்றார். விழாவில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசன், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், கோட்ட அமைப்பு செயலாளர் ராம ராஜசேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் பா.ஜ.க நிர்வாகிகள் சிவனந்தராஜா, அரசுமணி, ராமமூர்த்தி, பாலகிருஷ்ணன், லோகன்துரை, வெங்கடேஸ்வரன், இந்து முன்னணி தேனி வடக்கு மாவட்ட தலைவர் முருகன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் காசிமாயன் இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, தேனி மாவட்ட தலைவர் இராமராஜ் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்பட பா.ஜ.க மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தேனி மாவட்ட பா.ஜ.க தலைவர் பி.ராஜபாண்டியனுக்கு மாலை, பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
.......................
Comments