Skip to main content

போடி சட்டமன்ற காங்கிரஸ் அமைப்பாளராக பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன்சக்கரவர்த்தி நியமனம்: போடி வட்டார தலைவர் ஜம்பு சுதாகர் வாழ்த்துக்களை தெரிவித்தார்

தேனி, ஜன.23-

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கிராமம், வட்டாரம், நகரம், மாநகரம் பகுதியில்  மறுசீரமைப்பினை தமிழக காங்கிரஸ் கமிட்டி மேற்கொண்டு வருகிறது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியின் அமைப்பாளராக பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் வி.பி.ஏ.மிதுன்சக்கரவர்த்தி அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை அவர்கள் நியமித்துள்ளார்.


இதனைத்தொடர்ந்து போடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் அமைப்பாளரின் கட்சி பணி சிறக்க போடி வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பாக போடி வட்டார தலைவர் ஜம்பு சுதாகர், போடி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் அமைப்பாளர் மிதுன் சக்கரவர்த்தி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது போடி வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 
...................

Comments