Skip to main content

தேனியில் திமுக அயலக அணி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் விருந்து உபசரிப்பு விழா


தேனி, ஜன.12-
தேனி வடக்கு மாவட்ட தி.மு.க அயலக அணி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் அறுசுவை விருந்து உபசரிப்பு விழா தேனி வசந்த மஹாலில் 11.1.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு திமுக அயலக அணி வடக்கு மாவட்ட அமைப்பாளர் ராஜன் தலைமை தாங்கினார். 
தேனி வடக்கு மாவட்ட செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி பேசி அறுசுவை உணவு உபசரிப்பை துவக்கி வைத்து  அவர்களோடு அமர்ந்து அறுசுவை விருந்தில் உணவருந்தினார் 
இந்த நிகழ்ச்சியில் தேனி திமுக வடக்கு மாவட்ட அவை தலைவர் செல்லப்பாண்டி, தேனி நகர திமுக  செயலாளர் நாராயண பாண்டியன், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர்  மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், போடி நகராட்சி நகர் மன்ற தலைவர் இராஜராஜேஸ்வரி சங்கர், வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி உள்பட திமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுக தேனி வடக்கு மாவட்ட அயலக அணி நிர்வாகிகள் ஸ்டாலின் ராஜ்குமார், ஆறுமுகம், கண்ணன், அழகு முருகன், பொன் பாண்டியன் மற்றும் பெரியகுளம்  நேசம் தொண்டு நிறுவனம் இயக்குனர் முருகன் உள்ளிட்டோர்  செய்திருந்தனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 
....................

Comments