தேனி, டிச.13-
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாள் விழா தேனி நகர வடக்கு மற்றும் தெற்கு அ.ம.மு.க சார்பில் 13.12.2024 அன்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தேனி வடக்கு நகர செயலாளர் குருகணேஷ் தலைமை தாங்கினார்.
தேனி தெற்கு நகர செயலாளர் விஜயராஜன் முன்னிலை வகித்தார். விழாவில் தேனி அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன், அமமுக அமைப்பு செயலாளர் டாக்டர். கதிர்காமு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழாவின் போது தேனி பெத்தாட்சி விநாயகர் கோவிலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெயரில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமமுக நிர்வாகிகள் கோவிந்தராஜ், முருகன், ஜோல்ஜர் அகாடமி சின்னச்சாமி உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments