தேனி, அக்.30-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்ட செல்வபுரம் பகுதி திமுக கழகம் சார்பில் கோவை செல்வபுரம் சமுதாய கூடத்தில் கோவை மாநகராட்சி 76, 77, 78, 79 ஆகிய வார்டுகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், அங்கன் வாடி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை ஊழியர்களுக்கு அறுசுவை உணவு மற்றும் புத்தாடை இனிப்புகளை கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொ.அ.ரவி வழங்கினார்.
செல்வபுரம் பகுதி திமுக செயலாளர் கேபிள் மணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாமன்ற துணை மேயர் வெற்றி செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ராஜ்குமார், வசந்தாமணி மற்றும் வட்டக்கழக செயலாளர்கள் அறிவழகன், ராஜேஷ், இப்ராகீம் மற்றும் வட்டக்கழக நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள் கழக மூத்த முன்னோடிகள் இளைஞரணியினர் பலர் கலந்து கொண்டனர்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments