தேனி, அக்.27-
தேனி மாவட்டம், தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா 26.10.2024 அன்று நடைபெற்றது. விழாவுக்கு தேனி கம்மவார் சங்கம் துணைத்தலைவர் பாண்டியராஜ் தலைமை தாங்கினார். தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ செயலாளர் பெருமாள் சாமி முன்னிலை வகித்தார். ஐ.டி.ஐ முதல்வர் பிரகாசம் வரவேற்றார்.
விழாவில் தேனி கம்மவார் சங்கம் தலைவர் நம்பெருமாள் சாமி, செயலாளர் மகேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கினார்கள்.
விழாவில் தேனி கம்மவார் சங்க பொருளாளர் ரெங்கராஜ், இணைச்செயலாளர் ராஜா மன்னார், ஐ.டி.ஐ இணைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், ஐ.டி.ஐ பொருளாளர் சுதாகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். விழாவை ஐ.டி.ஐ., ஏ.டி.ஓ அவினாஷ் தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் கம்மவார் சங்க நிர்வாகிகள், ஐ.டி.ஐ., ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஐ.டி.ஐ., ஜே.டி.ஓ அழகுமலை நன்றி கூறினார்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments