தேனி, அக்.17-
தேனி நகர அ.தி.மு.க சார்பில் அ.தி.மு.கழகத்தின் 53-வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி தேனி-பெரியகுளம் சாலை ரயில்வே கேட் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேனி நகர அ.தி.மு.க செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். தேனி நகர துணைச்செயலாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சியின் 53-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருஉருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்து, கட்சி கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தேனி நகர் கழக நிர்வாகிகள் டெய்லர் முருகேசன், வீரமணி, கண்ணன், ராதாகிருஷ்ணன், லட்சுமி, பாக்கியம், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட அணி செயலாளர்கள் முத்துக்கிருஷ்ணன், தனலட்சுமி, சுரேஷ், தினேஷ்குமார், தேனி நகர அணி செயலாளர்கள் பிரகாஷ், அமுதவள்ளி, லியாகத் அலிகான், பாண்டி உள்பட அ.தி.மு.க-வினர் பலர் கலந்து கொண்டனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments