தேனி, அக்.14-
தேனியில் அ.தி.மு.கழக பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தேனி நகர அ.தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தேனி அம்பிவெங்கிடசாமி திருமண மண்டபத்தில் 14.10.2024 அன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு தேனி நகர செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். தேனி நகர துணைச்செயலாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். தேனி கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர், மாநில அம்மா பேரவை இணைச்செயலாளர்
ஜெயக்குமார், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், தலைமை கழக பேச்சாளர் வடுகை.சுந்தரபாண்டியன் உள்பட மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், தேனி நகர, சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் தேனி கிழக்கு மாவட்ட மகளிரணி செயலாளர்
தனலட்சுமி சொக்கலிங்கம் நன்றி கூறினார்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments