Skip to main content

தேனியில் டார்லிங் புதிய ஷோரூம் திறப்பு விழா

தேனி, செப்.29-

தமிழ்நாடு ஹோட்டல் அசோசியேசன் நிர்வாக இயக்குனர் டார்லிங் குழுமம் தலைவர் வெங்கட் சுப்பு சார்பில் தேனியில் டார்லிங் புதிய ஷோரூம் திறப்பு விழா 29.9.2024 அன்று நடைபெற்றது. இந்த புதிய ஷோரூமை கட்டிட உரிமையாளர் நல்ல கழுவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் .

விழாவின் போது தேனி ஸ்ரீ கௌமாரியம்மன் பேக்கரி அண்ட் ஸ்வீட்ஸ் உரிமையாளர் சுதாகர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வகுமார், செயலாளர் திருவரங்கபெருமாள், தேனி நகர முதன்மை துணை தலைவர் விஷ்வல் பிரபு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனர்.
விழாவில் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மதுரை விற்பனை துணை பொது மேலாளர் கிருஷ்ணசுமன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். திறப்பு விழாவில் தேனி மாவட்ட ஹோட்டல் சங்க நிர்வாகிகள், தேனி நகர முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஷோரூமில் எல்.இ.டி., டிவி, லேப்டாப், மொபைல், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி உள்பட வீட்டு உபயோக பொருட்கள் திறப்பு விழா சலுகை விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து டி.வி., உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர். திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை நவராஜா முருகன், பாலா கிரிஷ்ணன், முரளி, ஜேம்ஸ், நவீன், அஜித்குமார் ஆகியோர் செய்தனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments