Skip to main content

நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வேவ்ஸ்-24 கலை பண்பாட்டு நிறைவு விழா

தேனி, செப்.28-

தேனி அருகே உள்ள நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேவ்ஸ் 24 பண்பாட்டு நிகழ்ச்சி 2 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு விழா 28.9.2024 அன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் மதளைசுந்தரம்  வரவேற்புரை ஆற்றினார்.

விழாவின் போது நடந்த கலை நிகழ்ச்சியில் மியூசிக்கல் ரேப்சோடி, நீயா நானா, கொரியோபூம், மைம் ஒடிசி நாட்டுப்புற நடனம், பாட்டு போட்டி, கவிதை போட்டி, நடனப்போட்டி, மல்டிமீடியா, பேஸ் பெயிண்டிங், ஆர்ட் பிரம் வேஸ்ட், கோலப்போட்டி, வெஜிடேபிள் மற்றும் புரூட் கார்விங், மெகந்தி போட்டி, பொக்கை மேக்கிங், ப்யர்லெஸ் குக்கிங், கிளே மாடலிங் கிளாஸ் பெயிண்டிங்,சிகை அலங்காரம், ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
இவ்விழாவில் கேலக்டிக் ஸ்டார்ஸ், புளு பிளாஸ்ட்டாஸ், வைலட் வைப்பர்ஸ், ரோசி ரைடர்ஸ். பீனிக்ஸ் பிளாஸ்டர்ஸ், டைகர் தராசர்ஸ், டிராகன் வாரியர்ஸ் டைனோ தண்டர்ஸ் ஆகிய 8 அணிகளாக பிரிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். கலந்து கொண்ட 8 அணிகளில் மாணவர்கள் பிரிவில் முதல் பரிசை டிராகன் வாரியர்ஸ் அணியும். இரண்டாம் பரிசை பீனிக்ஸ் பிளாஸ்டர்ஸ் அணியும் பெற்றது. மாணவியர்கள் பிரிவில் முதல் பரிசை வைலட் வைப்பர்ஸ், அணியும், இரண்டாம் பரிசை ரோசி ரைடர்ஸ் மற்றும் கேலக்டிக் ஸ்டார்ஸ் அணியும் பெற்றன.

வேவ்ஸ் கலை நிகழ்ச்சியின் அறிக்கையினைஷவெனீஸ்குமார் சமர்ப்பித்தார். கலை நிகழ்ச்சி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியரின் அணியினருக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், கல்லூரியின் நிர்வாக்குழு உறுப்பினர்கள். ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள்  செய்திருந்தனர். 
முடிவில் வேவ்ஸ் கலை நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர் மதளைராஜ் நன்றி கூறினார்.

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments