தேனி, செப்.27-
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேவ்ஸ்'-2024 கலை மற்றும் பண்பாட்டு துவக்க விழா நடைபெற்றது.. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் கணேஷ்., பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்புரையாற்றினார்.
கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார். மகேஸ்வரன் இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் தன்னம்பிக்கை பேச்சாளர், கவிஞர், எழுத்தாளர், மற்றும் தமிழ் ஆராய்ச்சியாளருமான மதுரை தமிழ் இளவல் ராமகிருஷ்ணன்ன சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தன்னம்பிக்கை மூலம் மட்டுமே வாழ்வில் அனைத்து நிலைகளிலும் வெற்றி பெற முடியுமென்றும், இளம் தலைமுறையினர் தோல்விகளை சந்திக்க கற்றுக் கொள்ளுவதன் மூலம் பல சிறந்த வெற்றிகளை அடைய முடியுமென்றும், பொறியியல் பட்டதாரிகள் தங்கள் துறை சார்ந்த திறமைகளோடு ஆங்கில மொழி திறமையை வளர்த்து கொள்ளுதல், பொறியாளர்கள் தங்கள் அறிவின் மூலம் நவீன உலகத்தை உருவாக்கி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள். கல்லூரி காலங்களில் நல்ல தோழர்களை அடையாளம் காண வேண்டும்.
மேலும், சிறந்த புத்தகங்களை வாசிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுவதன் மூலம் வாழ்க்கையின் பல சிக்கல்களை தீர்க்கும் வாய்ப்புகள், நேர்மறையான சிந்தனைகளை மாணவர்கள் வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவை வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான எளிய வழியாக அமைகிறதென்றும், பாராம்பரிய தமிழ்பண்பாடு, கலாச்சாரங்கள் சமூக அக்கறை, சமூகம் பற்றிய உணர்வுகளோடு தங்களை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றைப் பற்றி விளக்கினார்.
விழாவின் போது நாட்டுப்புற நடனம், பாட்டு போட்டி, கவிதை போட்டி, நடனப்போட்டி, குறும்படம். தெருக்கூத்து. மல்டிமீடியா. டாக் ஆன் த ஸ்பார்ட், தற்காப்பு கலைகள், பேஸ் பெயின்டிங். ஸ்னோபகிராபி, மெகந்தி போட்டி,. பொக்கை மேக்கிங், ஆர்ட் புறம் வேஸ்ட், எப்பெல் பீ. புதையல் வேட்டை, சிகை அலங்காரம். ரங்கோலி, வெஜிடபிள் அல்லது புரூட் கார்விங் காரிபன் ஆர்ட் குசைன் மாஸ்டர், கிளாஸ் பெயின்டிங், ஆர்ட்டி கிராப்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர்கள் மாதவன், சத்யா. வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments