Skip to main content

தேனியில் முதலமைச்சர் கோப்பை-2024 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்: கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தொடங்கி வைத்தார்



தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  முதலமைச்சர்  கோப்பை - 2024 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா, தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆ.மகாராஜன்  (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலையில் 10.9.2024 அன்று துவக்கி வைத்தார்.

முதலமைச்சரின் மாவட்ட அளிவலான விளையாட்டுப் போட்டிகள் 10.9.2024 முதல் 24.9.2024 வரை நடைபெறவுள்ளது. இவ்விளையாட்டு போட்டிகளில் சிலம்பம், கைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, கபடி, கோ-கோ, கூடைப்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், ஓட்டப்பந்தயம், செஸ், கேரம், கிரிக்கெட் போன்ற பல்வேறு போட்டிகள் பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், பொதுப் பிரிவினர்கள், அரசு ஊழியர்கள் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. 

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்: பள்ளி  பிரிவுகளுக்கு :

1. தடகளம், வலைகோல்பந்து, சிலம்பம்,  நீச்சல், மேசைப்பந்து, கேரம், செஸ், கைப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் மாணவர்களுக்கு 10.9.2024  அன்றும், மாணவிகளுக்கு 11.9.2024 அன்றும்

2. கூடைப்பந்து, மட்டைப்பந்து, கால்பந்து, கபடி, கையுந்துபந்து, கோ-கோ – ஆகிய விளையாட்டு போட்டிகள் மாணவர்களுக்கு - 10.9.2024  (ம) 11.9.2024 அன்றும், மாணவிகளுக்கு 12.9.2024 (ம) 13.09.2024 அன்றும் 

3. இறகுப்பந்து – மாணவ (ம) மாணவிகள் (ஒற்றையர்)  13.9.2024 அன்றும், மாணவ (ம) மாணவிகள் (இரட்டையர்)  14.9.2024 அன்றும் நடைபெறுகிறது.

மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள்: கல்லூரி  பிரிவுகளுக்கு :

1. தடகளம், வலைகோல்பந்து, சிலம்பம்,  நீச்சல், மேசைப்பந்து, கேரம், செஸ், கைப்பந்து, இறகுபந்து– ஆகிய விளையாட்டு போட்டிகள் மாணவர்களுக்கு 17.9.2024 அன்றும், மாணவிகளுக்கு 18.9.2024 அன்றும் 

2. கூடைப்பந்து, மட்டைப்பந்து, கால்பந்து, கபடி, கையுந்துபந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் மாணவர்களுக்கு 17.9.2024 (ம) 18.9.2024 அன்றும், மாணவிகளுக்கு 19.9.2024 அன்றும் நடைபெறுகிறது                                    
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்: மாற்றுத்திறனாளிகள்  பிரிவுகளுக்கான : விளையாட்டு  போட்டிகள்:- 20.9.2024 (ஆண்ஃபெண் இருபாலருக்கும்) நடைபெறுகிறது. 

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்: பொதுப்பிரிவினர்களுக்கு :

தடகளம், இறகுப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, கேரம், சிலம்பம், கபடி, கையுந்துபந்து ஆண்களுக்கு  21.9.2024, பெண்களுக்கு22.9.2024 ஆகிய தேதிகளில் நடைபெகிறது.
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அரசு ஊழியர்கள்  பிரிவுகளுக்கு :
தடகளம், இறகுப்பந்து, கையுந்துபந்து, கபடி, கேரம், செஸ் ஆண்களுக்கு 23.9.2024 அன்றும் பெண்களுக்கு 24.9.2024 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
          
மாவட்ட விளையாட்டு  போட்டிகள்  நடைபெறும் இடங்கள்:- 

1. கால்பந்து, கோ-கோ – நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி  மைதானம் தேனி.
2. கிரிக்கெட் -  ஆயுதப்படை காவல் மைதானம்.
3. கேரம், செஸ் – நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 
மற்ற அனைத்து  விளையாட்டுகளுமே   மாவட்ட விளையாட்டு அரங்கம் தேனியில் நடைபெறுகிறது.
முன்னதாக மாவட்ட கலெக்டர் அவர்கள் தலைமையில் விளையாட்டு வீரர்கள் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். மேலும்  மாவட்ட அளவில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

இந்நிகழ்ச்சியில் தேனி-அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர்  ரேணுப்பிரியா பாலமுருகன், நகர் மன்ற துணை தலைவர் வழக்கறிஞர் செல்வம், போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்துமதி, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் ராஜன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விளையாட்டு ஆசிரியர்கள், வியைாட்டு நடுவர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments