இந்திய காட்டன் பெடரேஷன் அமைப்பு வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்று தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த எல். எஸ்.மில்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் எஸ். மணிவண்ணன் அவர்களுக்கு பாராட்டு விழா தேனியில் 30.8.2024 அன்று நடைபெற்றது நடைபெற்றது.
இந்த பாராட்டு விழாவில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர், தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் எம்.கே.எம்.முத்துராமலிங்கம் தலைமையில் தேனி வெளிச்சம் அறக்கட்டளை நிர்வாகி நாணயம் சிதம்பரம் மற்றும் சமூக ஆர்வலர்கள் எல்.எஸ்.மில்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.மணிவண்ணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து மடல் வழங்கி கௌரவித்தனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments