Skip to main content

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் தொழில்முறை விளையாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

அகில இந்திய தொழில்முறை காங்கிரஸ் (AIPC) தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி ஒப்புதலுடன் அகில இந்திய தொழில்முறை விளையாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஸ்மித் சிங் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தொழில்முறை விளையாட்டு பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளராக லியோ சதீஷ் குமார்  அவர்களை நியமனம் செய்துள்ளார். 

அதுபோல தென் சென்னை விளையாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளராக வசிம் மீரையும்,  வடசென்னை விளையாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளராக சிவனேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளர்கள் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை MLA அவர்கள் முன்னிலையில் பொறுப்பேற்று கொண்டனர். 

அப்போது புதிதாக பொறுப்பேற்று கொண்ட நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை அவர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டார். 

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments