தேனி திமுக வடக்கு மாவட்ட மகளிரணி சார்பில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் அவர்களுக்கு பாராட்டு விழா
தேனி தி.மு.க வடக்கு மாவட்ட மகளிரணி சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் அவர்களுக்கு பாராட்டு விழா தேனி அருகே உள்ள ஏ.பி.எம் ஹோட்டலில் 8.7.2024 அன்று நடைபெற்றது.
விழாவிற்கு வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் பவானி முத்துராஜா தலைமை தாங்கினார். மகளிர் அணி தலைவர் மாலா காமராஜ், துணைத்தலைவர் ஜெரினா பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா, மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் மணிமேகலை, கிருஷ்ணவேணி, கலையரசி, ராதிகா, அழகுமணி, சகிதா பானு மற்றும் வலைதள பொறுப்பாளர்கள் அனுசுயா, இந்துமதி உள்பட தி.மு.க நிர்வாகிகள், மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.
விழாவின்போது தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனுக்கு மகளிர் அணியினர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை மற்றும் புத்தகங்கள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர். முடிவில் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு உபசரிப்பு அளிக்கப்பட்டது.
Comments