Skip to main content

தேனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஹாக்கி மற்றும் ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு: அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்

தேனி மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே மாவட்ட கலெக்டர் அவர்களின் நிதியிலிருந்து ரூ.31.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஹாக்கி மைதானம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஸ்கேட்டிங் மைதானம் கட்டப்பட்டுள்ளது.

இந்த மைதானங்களை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா முன்னிலையில் 11.7.2024 அன்று திறந்து வைத்தார்.

அப்போது தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணக்குமார் (பெரியகுளம்), மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் உடனிருந்து சிறப்பித்தனர்.

உடல் நலத்தையும், மன நலத்தையும், பேணி காப்பதில் விளையாட்டின் பங்கு இன்றியமையாததாகும். குழந்தைகள் தொடர்ச்சியாக விளையாடுவதன் மூலம்  புத்துணர்வும் தன்னம்பிக்கையும், பெற முடியும், மேலும் சிறு வயதிலே தலைமைத்துவத்தையும் வளர்த்துக் கொள்ள முடியும். இதற்காகவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆண்டுதோறும் விளையாட்டுவிழா நடத்தப்பட்டு, வெற்றிபெறும் மாணவர்களுக்கு, பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்படுகிறது. மேலும் அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் மாநில தேசிய அளவில்  பங்குபெற  செய்ய முடியும்.

விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு மைதானங்களைப் பேணுவது  அவசியமாகும். அந்த வகையில் ஹாக்கி மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்களை ஊக்குவிப்பதற்காகவும், பிறருக்கு ஆர்வத்தை வளர்ப்பதற்காக ஹாக்கி  மற்றும் ஸ்கேட்டிங் மைதானம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, நகர்மன்ற தலைவர்கள் ரேணுபிரியா (தேனி-அல்லிநகரம்), திருமதி சுமிதா (பெரியகுளம்), ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் தங்கவேல் (பெரியகுளம்), எம்.சக்கரவர்த்தி (தேனி), மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து  கொண்டனர்.

சிவபாலன், சிறப்பு நிருபர் 

Comments