Skip to main content

தேனி கவுரா நாயுடு கல்வி மேம்பாட்டு சங்கத்தின் முப்பெரும் விழா


தேனி கவுரா நாயுடு கல்வி மேம்பாட்டு சங்கத்தின் 7-ம் ஆண்டு ஆண்டு விழா, சலங்கை பூஜை, வேலைவாய்ப்பு மையம் என முப்பெரும் விழா தேனி அம்பி வெங்கிடசாமி நாயுடு திருமண மண்டபத்தில் 12.5.2024 அன்று நடைபெற்றது. 

விழாவுக்கு தேனி கவுரா நாயுடு கல்வி மேம்பாட்டு சங்க கௌரவ தலைவர் நாராயணசாமி நாயுடு, தேனி கவுரா நாயுடு கல்வி மேம்பாட்டு சங்க தலைவர் சுப்புராம் நாயுடு ஆகியோர் தலைமை தாங்கினர்.


தேனி மாவட்ட நாயுடு மகாஜன சங்க தலைவர் பாலகுரு நாயுடு, பொருளாளர் நவநீதகிருஷ்ணன், தேனி கவுரா நாயுடு கல்வி மேம்பாட்டு சங்க செயலாளர் முத்துகிருஷ்ணன், அல்லிநகரம் நாயுடு மகாஜன சங்கத் தலைவர் சுப்புராஜ், செயலாளர் விஜயன், பொருளாளர் பாலகுரு, அம்பி வெங்கிடசாமி திருமண மண்டப தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


விழாவில் தொழிலதிபர்கள்  கம்பம் மனோகரன், ரியல் எஸ்டேட் வீரராஜ், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வி.ஆர்.ராஜன், தேனி கவுரா நாயுடு கல்வி மேம்பாட்டு சங்க பரதநாட்டிய ஆசிரியர் லதா உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் 


விழாவின் போது மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முடிவில் தேனி கவுரா நாயுடு கல்வி மேம்பாட்டு சங்க பொருளாளர் பார்த்திபன் நன்றி கூறினார்.

பாண்டியன், உதவி ஆசிரியர் 

Comments