Skip to main content

தேனியில் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள்

தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 10.10.2023 முதல் தொடங்கி 20.10.2023 வரை 8 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் 11.10.2023 அன்று தேனி பி.சி.கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 12.10.2023 அன்று ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 13.10.2023 அன்று போடிநாயக்கனூர் ஜ.கா.நி.மேல்நிலைப் பள்ளியிலும், 17.10.2023 அன்று சின்னமனூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி (காலனி), 17.10.2023 அன்று உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும், 18.10.2023 அன்று கம்பம் அரசு கள்ளர் துவக்க பள்ளியிலும் (உத்தமபுரம்), 19.10.2023 அன்று பெரியகுளம் எட்வர்ட் நினைவு நடுநிலை பள்ளியிலும், 20.10.2023 அன்று மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி.மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 8 நாட்கள் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

 

இந்த சிறப்பு மருத்துவ முகாமில்  மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்குதல், தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கு ஆலோசனை வழங்குதல்,  மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-6, குடும்ப அட்டை நகல் , ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சதிஷ், இணை ஆசிரியர் 

Comments