Skip to main content

திமுக மகளிர் அணி & மகளிர் தொண்டர் அணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் 7 ஆம் தேதி திருச்சியில் நடக்கிறது

தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., தலைமையில் தி.மு.க மகளிர் அணி மற்றும் தி.மு.க மகளிர் தொண்டர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் வரும் 7ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்குத் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி., கலந்து கொண்டு புதிய மகளிர் அணி நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றுகிறார். கலைஞர் நூற்றாண்டை மக்களுக்கு பயனுள்ள வகையில் கொண்டாடுவது, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் நிர்வாகிகளை நியமிப்பது, உறுப்பினர் சேர்க்கை, பயிற்சி பாசறை உள்ளிட்ட மகளிர் அணி மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. 

அதுபோல இந்த கூட்டத்தில் தி.மு.க முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும்,பள்ளி கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தனராக கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ந.தியாகராஜன், திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் க.வைரமணி, திருச்சி மேற்கு மாநகர தி.மு.க செயலாளரும்,திருச்சி மாநகர மேயர் மு.அன்பழகன், தி.மு.க மகளிர் அணி தலைவி விஜயா தாயன்பன், மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ராணி, மகளிர் அணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார், மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளர் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ, மகளிர் அணி மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

சீனிவாசன், உதவி ஆசிரியர் 

Comments