தேனி கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்காக ரூ.95 லட்சம் நிர்ணயம்: முதல் விற்பனையை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்
கோ-ஆப்டெக்ஸ், என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு தொடர்ந்து 88 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது.கோ-ஆப்டெக்ஸ்' விற்பனை நிலையங்களில் ஆர்கானிக் புடவை இரகங்கள். காஞ்சிபுரம் பட்டு, சேலம் பட்டு, திருப்புவனம் பட்டு கோயம்புத்தூர் மென்பட்டு சேலைகள், கண்டாங்கிச் சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், காஞ்சி காட்டன், கோவை கோரா காட்டன், சேலம் காட்டன், பரமக்குடி காட்டன்', திண்டுக்கல் காட்டன் மற்றும் அருப்புகோட்டை காட்டன் சேலைகள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன. மேலும் நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக லினன் சட்டைகள், லினன்/பருத்தி (Linen/Cotton) சட்டைகள் லுங்கிகள் மற்றும் வேட்டிகள் உள்ளன. மேலும் மகளிருக்காக --சுடிதார் இரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தருவிக்கப்பட்டுள்ளது.
கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. தேனியில் உள்ள கே-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையின் சிறப்பு விற்பனையை தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜுவனா, 21.9.2023 அன்று (வியாழக்கிழமை) குத்து விளக்கேற்றி வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். தேனி விற்பனை நிலையத்தின் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.47.85 லட்சங்கள் ஆகும். நடப்பு 2023 ஆண்டு தீபாவளி விற்பனை குறியீடாக ரூ.95 லட்சங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'கோ'ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் வர்த்தக மேலாளர் சங்கர், மேலாளர் மோகன்குமார் (இரகம் & பகிர்மானம்), மேலாளர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சதிஷ், இணை ஆசிரியர்
சிவபாலன், சிறப்பு நிருபர்
Comments