தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 14-வது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க நாள் விழா 20.9.2023 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் T.ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல். பொருளாளர் M.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர்கள் A.ராஜ்குமார். A.S.R.மகேஸ்வரன், இணைச்செயலாளர் S.நவீன்ராம் ஆகியோர் வாழத்துரை வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் Dr.C.மதளைசுந்தரம் கல்லூரியின் துறைத்தலைவர்களை அறிமுகப்படுத்தி, கல்லூரியின் விதிமுறைகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்து வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில் இளம் தலைமுறை தன்னம்பிக்கை பேச்சாளர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ பருவத்தில் தற்காலிகமான மகிழ்ச்சியினை தவிர்த்து, நேர்மறையான எண்ணங்களை வளர்த்து எதிர்கால தேவைக்கான அறிவு மற்றும் ஆற்றல்களை பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் தேவையற்ற எண்ணங்களை தவிர்த்து ஒழுக்கத்துடன் கூடிய நேர்மறையான சிந்தனைகள், வாழ்வின் மாற்றங்கள், சவால்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்து கொள்ளுதல், மாணவர்கள் உயர்ந்த நோக்கத்தோடு செயல்படுதல் மற்றும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வளர்ச்சி ஒன்றே நோக்கம் என்று பொறியியல் மாணவர்கள் செயல்பட வேண்டுமென்று மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் 13-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் 14-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் 14 மரக்கன்றுகள் நடப்பட்டன. முதலாமாண்டு மாணவர்களுக்கு இதர மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இவ்விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் ஆட்சிமன்றகுழு உறுப்பினர்கள், நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் முதல்வர்கள், துணை முதல்வர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர்கள் N.மாதவன், டாக்டர் M.சத்யா, வேலை வாய்ப்பு அலுவலர் டாக்டர்.C.கார்த்திகேயன், முதலாமாண்டு துறையின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.சித்ரா மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். முடிவில் கல்லூரி முதலாம் ஆண்டு துறைத்தலைவர் பேராசிரியர் C.பிரதாப் நன்றி கூறினார்.
சதிஷ், இணை ஆசிரியர்
சிவபாலன், சிறப்பு நிருபர்
Comments